தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின் வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டார், அத்துடன் ஒப்பந்த நிறுவனங்களுக்கு நிலுவை தொகையை வழங்க 4% கமிஷன் பெற்றுக்கொண்டே மின்வாரியம் தரப்பு பணத்தை ரிலீஸ் செய்வதாக கூறி பணபரிமாற்ற விவரத்தை வெளியிட்டு இருந்தார்.
இந்த சூழலில் அண்ணாமலை வெளியிட்டது ஆதாரம் இல்லை எனவும், அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கூறினார் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதற்கு பதில் அளித்த அண்ணாமலை ஆதாரத்தை கொடுத்துட்டோம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது, நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் அங்கு உண்மையை சொல்கிறோம் என தெரிவித்தார்.
இந்த சூழலில் அண்ணாமலைக்கு BGR எனர்ச்சி நிறுவனம் தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அதில் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் இல்லை என்றால் அண்ணாமலை மற்றும் செந்தில்குமார் என்ற ட்விட்டர் id இருவரும் 500 கோடி கொடுக்கவேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அண்ணாமலை பதில் கொடுத்துள்ள விதம்தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது, வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிறுவனத்திற்கு அண்ணாமலை கொடுத்த பதில் பின்வருமாறு :- சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள்
நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்!அறிவாலயம் அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது! சந்திப்போம்! என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையை எதிர்க்கட்சிகள் ஆட்டை கொண்டு விமர்சனம் செய்த சூழலில் அதே ஆட்டை கொண்டு பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.
மேலும் திமுக அமைச்சர்களை போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை எனவும் அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பது அண்ணாமலை மன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உறுதி என தெளிவாக தெரிகிறது. ஆமாம் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஆனால் செந்தில்பாலாஜி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே ஏன்?
சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள் 🙏
— K.Annamalai (@annamalai_k) October 26, 2021
நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்!@arivalayam அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை!
நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது!
சந்திப்போம்!#ResignEBMin