தஞ்சையில் இந்து முன்னணி மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளு சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது, கோவில் நகைகளை தமிழக அரசு உருக்கி அதனை வங்கியில் டெபாசிட் செய்வதை எதிர்த்து இந்து முன்னணி மாநிலம் முழுவதும் போராட்டத்தில், ஈடுபட்டது,இந்நிலையில் தஞ்சையிலும் இந்து முன்னணியினர் தங்கள் கொடி மற்றும் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
அதே இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த விவசாய அமைப்புகள் மற்றும் இன்னும் பிற அமைப்புகள், உத்திரபிரதேசத்தில் கார் ஏறி இறந்தவர்கள் அஸ்தியை கரைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து மத்திய அரசிற்கு எதிர்ப்பை பதிவு செய்து கோஷம் போட்டனர், ஒரு கட்டத்தில் கோஷம் இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது.
ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் அமைப்பினர், இந்து முன்னணி நோக்கி குவிய பதிலுக்கு வேட்டியை மடித்து கட்டி இப்போ 'வா' என அழைப்பு விடுக்க, மிரண்ட அமைப்பினர் உடனடியாக சாலையில் இறங்கி இந்து முன்னணி அராஜகம் என கோஷம் போட தொடங்கினர், இரு தரப்பிற்கும் இடையே மோதல் உருவாகத வண்ணம் காவல்துறை இரண்டு தரப்பையும் கட்டுப்படுத்தியது.
இந்த காட்சிகளை இந்து முன்னணி தனது அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது, அதிலும் இந்து முன்னணியை சேர்ந்த ஒருவர் தனது வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு இப்போ வா என அழைப்பு விடுத்த காட்சி நிச்சயம் எதிர் தரப்பை அதிர செய்திருக்கிறது என்பதில் மாற்றாம் இல்லை.வீடியோ பார்க்க கிளிக் செய்யவும் .