இந்தியா முழுமைக்கும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு மத்திய அரசே நேரடியாக இலவசமாக கொடுத்து வருகிறது உலகில் அனைத்து நாடுகளும் கொரோனா தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்த சூழலில் இந்தியா தனது சொந்த தயாரிப்பு தடுப்பூசிகள் மூலம் இந்திய மக்களை காப்பாற்றியுள்ளது இப்படி பல சாதனைகளை மத்திய அரசு செய்துகொண்டு இருக்கும் சூழலில் தமிழகத்தில் பெரும் குற்றசாட்டு எழுந்தது.
மத்திய அரசாங்கம் இலவசமாக கொடுக்கும் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு இலவசமாக வழங்குவது போன்ற ஒரு தோற்றத்தை திமுகவினர் உண்டாக்கி வருவதாகவும் திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்துகிறார்கள் ஆனால் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் மத்திய அரசின் பிரதிநிதியான பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்த மறுப்பதாக பாஜகவினர் குற்றம் சுமத்தினர். பல கொரோனா தடுப்பூசி மையங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது, இந்த சூழலில் மதுரையை சேர்ந்த பாஜகவினர் பதாகை ஒன்றை வைத்துள்ளனர் அதில் மத்திய அரசு வழங்கும் இலவச தடுப்பூசியை மாநில அரசு வழங்கும் இடம் என பேனர் வைத்து உள்ளனர் இதை பார்த்த திமுகவினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ள சூழலில் திமுக எம்.பி வைரலாகும் போஸ்டரை பகிர்ந்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-
ஒன்றிய அரசு சும்மாவா தருகிறது? தமிழகத்திடம் இருந்து பல்லாயிரம் கோடிகளை ஜி.எஸ்.டி வரியாக ஒன்றிய அரசு பெறுகிறது. அதிலும் தமிழக அரசுக்கு வர வேண்டிய பங்கை இன்னும் முழுமையாகக் குடுத்தபாடில்லை!!ஒன்றிய அரசிற்கு ஒரு ரூபாய் குடுக்கும் உத்திர பிரதேசம் , பீகார் போன்றவை பதிலுக்கு பத்து ரூபாய் பெறுகின்றன!ஆனால் பத்து ரூபாய் குடுக்கும் தமிழகம் ஒரு ரூபாய்தான் ஒன்றிய அரசிடம் இருந்து பெறுகிறது போகட்டும்... பதிலுக்கு இனி தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் அலுவலகங்களான தபால்நிலையம் , ரயில் நிலையம் போன்றவற்றின் முன்பு "இது தமிழக அரசின் நிலத்தில் அமைந்துள்ள ஒன்றிய அரசு அலுவலகம்" என்று போர்டு வைத்தால் எப்படி இருக்கும் அவர்களுக்கு!!? என கேள்வி எழுப்பி இருக்கிறார் இதற்கு பல பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா முதலில் தமிழை எழுத கற்று கொள்ளவேண்டும் பல இடங்களில் குடுக்கும் என பதிவு செய்துள்ளீர்கள் அது குடுக்கும் அல்ல கொடுக்கும் உங்கள் கேள்வியே தவறு இங்கு மாநில அரசு நிலம் என்ற ஒன்றே இல்லை முதலில் தமிழக சட்டம் மன்றம் அமைந்துள்ள ஜார்ச் கோட்டை நிலமே தமிழக அரசிற்கு சொந்தமானது இல்லை என புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் மாநில அரசு எந்த தொழில் மூலம் தனியாக பணம் வரவு செய்கிறது என சொல்ல முடியுமா? மக்கள் கொடுக்கும் வரிப்பணம் தான் எனவே மத்திய அரசு கொடுக்கும் நிதியை பயன்படுத்தி செயல்படுத்துகிற திட்டத்தை மத்திய அரசின் பெயரில் வெளியிடுவதே சரி, அதே போல் மாநில அரசு நிதியில் பயன்படுத்த படும் திட்டங்களுக்கு மாநில அரசின் பெயரை வைப்பதே சரி.
இறுதியாக உங்கள் கருத்திற்கே வருவோம் இனி தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் அலுவலகங்களான தபால்நிலையம் , ரயில் நிலையம் போன்றவற்றின் முன்பு "இது தமிழக அரசின் நிலத்தில் அமைந்துள்ள ஒன்றிய அரசு அலுவலகம்" என்று போர்டு வைத்தால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள் சரி நாளை நீங்கள் டெல்லியில் சென்று அமர்ந்து இருக்கும் நாடாளுமன்றத்தில் உங்கள் இருக்கையில் இது மத்திய அரசு நிதியில் இயங்கும் கட்டிடத்தில் உள்ள இருக்கை மாநில அரசின் நிதியில் அல்ல என எழுதி வைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என அடுகடுக்காக பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர் பாஜகவினர்.