Tamilnadu

ஜெயில் தண்டனை எல்லாம் விடுங்கள் மதமாற்றம் தடை சட்டத்தில் உள்ள "அந்த சரத்து" ஆடி போயிருக்கும் மிஷினரிகள்!

Latest tamil news
Latest tamil news

கர்நாடக மாநிலத்தில் மத மாற்ற தடை சட்டம் குறித்த மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இன்று அது குறித்த விவாதம் நடைபெற உள்ள சூழலில் மசோதாவில் சொல்லப்பட்டுள்ள விஷயம் மிகவும் அதிர்ச்சியை மத ஊழியம் செய்யும் நபர்களுக்கு உண்டாக்கியுள்ளது, குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் மத மாற்ற ஊழியம் செய்யும் நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சம் பின்வருமாறு :-


கர்நாடக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்த மதமாற்ற தடை சட்ட மசோதாவில் சட்டத்தை மீறுபவர்களுக்கு என்னென்ன தண்டனை கிடைக்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரை கட்டாயப்படுத்தி மதம் மாற்றப்பட்டு இருந்தால், அதுபற்றி குடும்ப ரத்த உறவுகள் அல்லது உறவினர்கள், நண்பர்கள் போலீசில் புகார் தெரிவிக்கலாம். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், மனநிலை சரி இல்லாதவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினரை மதம் மாற்றினால் அதில் தவறு செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு கூட்டமாக மதம் மாற்றுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணமாக வழங்க குற்றவாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க கோர்ட்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதே குற்றத்தை 2-வது முறையாக செய்து தண்டிக்கப்பட்டால்அத்தகையவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மதம் மாற பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மதம் மாற விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அந்த மதமாற்ற தடை சட்ட மசோதாவில் விளக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

மதம் மாற விரும்புகிறவர்கள் அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள படிவத்தில் மாவட்ட கலெக்டரிடம் 30 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். மதம் மாறும் நிகழ்வு குறித்த விவரத்தை வழங்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலக தகவல் பலகையில் மதம் மாறுபவர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். அதுகுறித்து ஆட்சேபனைகளை வரவேற்க 30 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும். ஒருவேளை ஏதாவது ஆட்சேபனைகள் வந்தால் அதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி மூலம் விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை மூலம் மாவட்ட கலெக்டர், மதமாற்றத்தில் தவறு நடந்துள்ளது என்று உணர்ந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மத அமைப்புகளின் கல்வி நிறுவனங்களில் இலவச கல்வி வழங்க தடை.

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மதமாற்றம் தடை சட்ட மசோதாவில் மதம் மாற்றும் நோக்கில் என்னென்ன விஷயங்கள் செய்யக்கூடாது என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- மதம் மாற்றும் நோக்கில் பரிசு பொருள், பணம் கொடுக்க கூடாது.மத அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேலை, இலவச கல்வி வழங்க கூடாது. திருமணம் செய்வதாக உறுதி அளித்தல்-நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்தல் போன்றவை செய்யக் கூடாது. ஒரு மதத்திற்கு எதிராக மற்றொரு மதத்தை மிகைப்படுத்த கூடாது.ஒருவரை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ கட்டாயப்படுத்துதல் குற்றம்.

கூட்டமாக (அதாவது 2 பேருக்கு மேல்) ஒரே நேரத்தில் மதம் மாற்றுதல் சட்டவிரோதம். 18 வயதுக்கு கீழ் உள்ளோர், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினரை மதம் மாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதில் பல சம்பவங்கள் இருந்தாலும் மதம் மாறினால் தான் திருமணம் செய்வோம் என பெண் வீட்டாரோ அல்லது ஆண் வீட்டாரோ தெரிவித்தால் அவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும். மேலும் குழுவாக மத ஊழியம் செய்து அதன் மூலம் மதமாற்றம் நிகழ்ந்தால் அவர்கள் கம்பி என்னவேண்டிய சூழல் உண்டாகி இருக்கிறது எனவே யாராவது மதம் மாற்ற ஊழியம் என பெங்களூரு பக்கம் சென்று மேடை அமைத்து ஊழியம் செய்தால் அவர்கள் நிச்சயம் சிறை செல்வது உறுதி, இந்த சரத்து தான் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஊழியம் செய்து வருகின்றன மிஷனரி இயக்கங்கள் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.