இந்தியாவில் காலாவதியானது ட்விட்டர் முக்கிய செய்தி வெளியானதுSocial media
Social media

சமூகவலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளின் படி - குறை தீர்க்கும் அதிகாரி, நிர்வாகத்தின் தொடர்பு நபர், இணக்க அதிகாரி - ஆகியோரை நியமிக்க தவறியதால்,  ட்விட்டர் தன் "இடைநிலை" (intermediary) அந்தஸ்தை இழந்தது! 

இதன் காரணமாக, இனி ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பதியும் தவறான - சட்டவிரோதமான தகவல்களுக்கு ட்விட்டரும் பொறுப்பேற்கும் கட்டாயம். காவல்துறை விசாரணை, கைது, சிறை நடவடிக்கை உண்டு என அழுத்தம் திருத்தமாக கூறப்படுகிறது.

ட்விட்டர் மீதும் அதன் பயன்பாட்டாளர்கள்  -ரானா அயூப் கான், முகமது ஜுபேர், சபா நாக்வி, சல்மான் நிஜாமி உள்ளிட்ட பலர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. காரணம்:   அல்ட்நியூஸ் (altnews) எனும் 'உண்மை அறியும்' (fact-check) அமைப்பை சேர்ந்த முகமது ஜுபேர் என்பவன், "உத்தரபிரதேசத்தில் வயது முதிர்ந்த பாய் ஒருவரை ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி சிலர் அவரை வற்புறுத்தி அடித்தனர். அவர் தாடியை வெட்டினர்" என ஒரு வீடியோ பகிர,

அதை விசாரித்த உபி காவல்துறை, "அந்த முதியவர் பாய் தாயத்து விற்பவர். அவரிடம் தாயத்து வாங்கியவர்கள், அந்த தாயத்தால் அவர்களுக்கு கெட்டது நடந்ததாக சொல்லி அவரை அடித்திருக்கிறார்கள். அடித்த நால்வரில் மூவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவரை ஜெய்ஶ்ரீராம் சொல்ல சொல்லவில்லை என்று உறுதியும் அளித்துள்ளனர்.

கலவரம் தூண்டும் நோக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்த முகமது ஜுபேர் அந்த வீடியோவை மியூட் செய்து உள்நோக்கத்துடன் பகிர்ந்திருக்கிறான். ஒலியில்லா வீடியோவை பார்த்து உண்மை என நம்பிய ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்தனர். சன் நியூஸ் உள்ளிட்ட பல ஊடகங்களும்  அதை சுய அறிவு விசாரணை இல்லாமல் காப்பி செய்து பகிர்ந்தனர். 

இந்து முஸ்லிம் கலவரம் உருவாகும் அபாயம் இருந்ததால், உ.பி போலீஸ் அந்த வீடியோவை 'manipulated media' என ட்விட்டரை அறிவிக்க சொல்லியும் ட்விட்டர் கேட்கவில்லை. அந்த முதியவரை பேச வைத்து வீடியோ எடுத்தவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நபர்.

அடுத்த வருட தேர்தலுக்குள் இம்மாதிரி கலவரத்தை தூண்டும் செயல்கள் நிறைய நடந்தேறும். அதற்கு ட்விட்டர் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதற்கு இந்த ஒரு வீடியோ பரவலே காரணம் என கூறப்படுகிறது - தவறான தகவல்களை பகிர வைத்து கலவரத்தை தூண்ட உதவும். உண்மைகளை ப்ளாக் பண்ணும் என ட்விட்டர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இப்போது ட்விட்டர்  இண்டர்மீடியரி அந்தஸ்தை இழந்ததால், தவறான தகவல்களை நீக்க வில்லை என்றால் அதன் பணியாளர்கள் கைது செய்யப்படுவர் என்பது உறுதி விரைவில் இதே நிலை நீடித்தால் இன்று அந்தஸ்தை இழந்த ட்விட்டர் இந்தியாவில் டிக் டாக் போன்று நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Share at :

Recent posts

View all posts

Reach out