Tamilnadu

கைது செய்யபட்ட பாஜக நிர்வாகி களத்தில் நேரடியாக இறங்கி அடித்த மாவட்ட தலைவர் சபாஷ் இது வேற லெவல்

Dindugal
Dindugal

தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் களத்தில் இனி பாஜக களம் இறங்கும் என்பது நேரடி சாட்சியாக இன்று அமைந்துள்ளது, ஆட்சிக்கு வந்துவிட்டோம் என ஆட்டம் ஆடிய திமுகவினரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முதல் அடி கொடுக்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதி திமுக நிர்வாகி கணேசன் என்பவர் திமுக ஆட்சி அமைப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் இன்னும் சில நாட்களில் திமுக ஆட்சி அமைந்ததும், பாஜகவினர் மீது கைது நடவடிக்கை எடுக்கபடும், உங்களுக்கான நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மிரட்டும் போக்கில் பதிவு செய்துள்ளார்,

இது போன்ற பதிவுக்கு பாஜக திண்டுக்கல் மாவட்ட வடமதுரை நகர ஐடி பிரிவு தலைவர் சரவணன் சமூக வலைத்தள வழியாக பதில் விமர்சனம் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தொடர்ந்து திமுகவினர் மற்றும் பாஜக நிர்வாகி சரவணன் இடையே சமூக வலைதளத்தில் கருத்து மோதல் மற்றும் அரசியல் விமர்சனங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது, இதனை தொடர்ந்து திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலை பாஜக நிர்வாகி சரவணனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து அமர வைத்துள்ளனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் காவல் நிலையம் சென்று விமர்சனம் செய்த்தவரை கைது செய்யாமல் எதிர் விமர்சனம் செய்த்தவரை மட்டும் கைது செய்வது என்ன நியாயம் என்றும், காவல் துறை ஒருதலை பட்சமாக செயல்படுவதாக தங்கள் வாதங்களை முன் வைத்தனர், மேலும் திமுக நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்ததையும் சுட்டி காட்டினார்.

மேலும் உடனடியாக கைது செய்யபட்ட பாஜக நிர்வாகியை விடுதலை செய்யவேண்டும் எனவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தனர், ஆனால் அதற்கு முதலில் காவல்துறை இணங்கவில்லை, இதையடுத்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனால் நகரமே பரபரப்பானது, பாஜகவினர் காவல் நிலையம் நோக்கி குவிய தொடங்கினர், மாநில நிர்வாகிகள் பலர் கண்டனங்களை தெரிவித்தனர் குறிப்பாக பாஜகவை சேர்ந்த பேராசிரியர் ராமா ஸ்ரீனிவாசன் , நாராயணன் திருப்பதி, நிர்மல் குமார் உள்ளிட்ட தலைவர்கள் காவல்துறை மூலம் திமுக அடக்கு முறையில் ஈடுபட நினைப்பதை நிறுத்தி கொள்ளவேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சொந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டார் ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருப்பதாக கூறி அதிகார திமிரை காட்ட நினைத்த திமுகவினருக்கு இன்றைய சம்பவம் புலி வாலை பிடித்த கதையாக மாறியுள்ளது, பாஜக தொண்டன் மீது கைவைக்க நினைத்தால் இனி பாஜகவினரே நேரடியாக களத்தில் இறங்குவார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.

நீங்கள் ஸ்டேட் என்றால் நாங்கள் சென்ட்ரல் என ப்ரூப் செய்துள்ளது இன்றைய பாஜகவின் நடவடிக்கை.