சுபவீ தியாகு இருவரின் களவாணி தனத்தை போட்டுடைத்தார் கவிஞர் தாமரை .. அனைத்தையும் வெளியிட்டார்Kavingar thamarai
Kavingar thamarai

சுப வீரபாண்டியன் - தியாகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் கூட்டு களவாணிகள் எனவும் அவர்கள் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்கள் என பல ஆண்டுகளாக கவிஞர் தாமரை கூறிவருகிறார், இந்நிலையில் தற்போது இருவரை பற்றியும் முழு உண்மையை சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறிய தாமரை முதல் பாகமாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவை பின்வருமாறு :-  2016 இல் எடுத்த ஆனந்தவிகடன் (#மீள்) நேர்காணலைத் தனிப்பதிவில் இடுகிறேன். பகுதி - 2 இல் காணவும். நீளம் காரணமாக இந்தப் பதிவை தனியே இடுகிறேன் இன்றும் அந்த நேர்காணல் பதில்கள் பொருந்துகின்றன. நானெழுப்பிய கேள்விகள் அப்படியேதான் இருக்கின்றன.என்ன ஒன்று, அன்றைய தேதியில் #MeToo  போன்றவை இல்லை. வெளிப்படையாக ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைப்பது கடினம். ஆனால் இன்று அப்படியில்லை. எத்தனை பெரிய இடத்தில் இருந்தாலும் வைக்கலாம் எனும் நிலை வந்துள்ளது. இந்த மாறிய சூழ்நிலையில் என் நேர்காணல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

 அப்போது படிக்காதவர்கள் இப்போது படித்துத் தெரிந்து கொள்ளலாம், படித்தவர்கள் நினைவு படுத்திக் கொள்ளலாம். என் தெருப் போராட்டத்தின் முடிவில், தியாகு மீது தனியார் குழு ஒன்றின் விசாரணை அறிவிக்கப் பட்டது. ஓவியர் வீரசந்தனம் அவர்கள் தலைமையில், இயக்குநர் வ.கௌதமன் ( இன்று தமிழ்ப்பேரரசுக் கட்சி), ஊடகவியலாளர் பா.ஏகலைவன் முன்னெடுப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 

    1½ ஆண்டுகள் அரும்பாடு பட்டு ஓரளவு முடித்திருந்தோம். அவற்றுக்கான அடுத்தகட்ட நிகழ்வில், எதிர்பாராமல் ஐயா வீரசந்தனம் மறைந்தார். அவரிடம் கொடுக்கப் பட்டிருந்த விசாரணை தொடர்பான கோப்பும் காணாமல் போனது. அதோடு இந்த விவகாரத்தை முன்னெடுக்க முடியாமல் தேங்கிப் போனது எனக்கான பின்னடைவு ; தியாகுவுக்குக் கொண்டாட்டம் !

இருந்தாலும் இது தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் என்னிடம் உள்ளதாலும் இன்றைய சூழ்நிலை இதுபோன்ற பொறுக்கிகளுக்கு எதிராக இருப்பதாலும் அவற்றை தூசி தட்ட வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கருத வேண்டியிருக்கிறது. 2012 இல் தியாகு ஓடிப் போனது ஒரு பெண்ணுடன். 2014 இல் ஓடிப் போனது வேறொரு பெண்ணுடன். இரண்டுக்கும் இடையில் 2013 இல் 'வெற்றி அல்லது வீரச்சாவு' என்றொரு கேலிக்கூத்து. 2012 இல் 'அந்தப் பெண்'ணுடன் ஓடிப் போனபோது, வைகோ அவர்கள் வீட்டில் வைத்து, பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் முன்னிலையில் தவறுகளைத் திருத்தி வீடு திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டார் தியாகு.

தெரியாமல் செய்தால்தானே தவறு ? தெரிந்தே செய்வது குற்றமல்லவா ?. எனவே மீண்டும் தொடர்ந்தார். இத்தகைய குற்றச்சாட்டுகள் தியாகு மீது வெளிப்படையாக வந்து, அவரது சொந்த இயக்கத்திலிருந்தே அவர் வெளியேற்றப்பட்டு, பொருளுதவிகள் நிறுத்தப்பட்டு அரசியல் அநாதையாக, பிச்சைக்காரனாக நின்றபோது, 'ஐயோ தியாகு உங்களுக்கு நானிருக்கிறேன்' என்று கட்டிப் பிடித்துக் கொண்டவர் சுபவீ. ஆனால் சோழியன் குடுமி சும்மா ஆடாதல்லவா ?

அந்தப்பெண்' சுமத்திய குற்றச்சாட்டுகளிலிருந்து திசைதிருப்ப தியாகு+சுபவீ கூட்டு மூளையில் உதித்ததுதான் ' காமன்வெல்த் உண்ணாவிரதப்' போராட்டம் ! முன்னரே ஒத்திகை பார்த்த நாடகம் ! நானே கண்ணுற்ற சாட்சி ( Eye Witness ) ! அப்போதிருந்து இரண்டு பேரின் கூட்டுக் கயமைத்தனம் Going Steady !.  

   2014 இல் 'இந்தப் பெண்'ணுடன் ஓடியபோது, நான் இனி பொறுப்பதில்லை என்று வெளியே வந்து போராட்டம் நிகழ்த்தினேன். அப்போது தியாகு மறந்தும் மன்னிப்புக் கேட்டுவிடக் கூடாது என்று இட உதவி, பொருளுதவி, அரசியல் உதவி  எல்லாம் செய்து அரணாக நின்றவர் சுபவீயார் ! இதில் கலைஞர் ஐயாவின் பெயரைச் சொல்லி எனக்கு அச்சுறுத்தல் வேறு !அண்மையில் இரண்டு பேரும் ஒருவரையொருவர் எதிர்த்து திராவிடமா ? தமிழ்த்தேசியமா ? என்று 'மயிர் பிளக்கும்' 

விவாதத்தை நடத்தி வருவதையும் 'ஆகா, இப்படியொரு அறிவார்ந்த விவாதமா?' என்று அப்பாவி ஆடுகள் வாய்பிளந்து நிற்பதையும் அரசியல் வட்டாரம் கண்ணுற்றிருக்கலாம். நம்புங்கள், அத்தனையும் நடிப்பு ! இருவரும் எதிரெதிர் தரப்பில்லை, ஒரே தரப்புதான் - மக்களை முட்டாளாக்கும் தரப்பு !. அதிலும் சுபவீயார் இப்போது ஏதோ 'திராவிடத்துக்கே' தன்னை தத்துவ ஆசான் போலவும் திராவிடர் கழகங்களின் தகத்தகாயக் கேடயம் போலவும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான புள்ளிகளை வாரி வழங்கும் 'ஆயுத அளிநர்' (Weapon Supplier) ஆகவும் தன்னைக் காட்டிக் கொள்வது.

பெண்விடுதலைக்கு அடிகோலிய பெரியாரியம் பழைய காலம் ; பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முன்னணியில் இருப்பது நிகழ்காலம் ! அடுத்தவன் செய்தால் குற்றம், தான் செய்தால் புரட்சி என்கிற நிலையெடுத்த திராவிடர் கழகங்களின் அறத்தைப் பார்த்து நாடே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இவர்களை அம்பலப்படுத்தும் காலம் வந்து விட்டது எனத் தோன்றுகிறது. காலம்தான் எத்தகைய விந்தைகளை நிகழ்த்துகிறது !

உண்மை உறங்குவதில்லை, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிளந்து வெளியே வரும் என்பதை நானும் உணர்ந்து கொண்டேன். காத்திருங்கள்.... பின்குறிப்பு  :- அந்தப்பெண், இந்தப்பெண் என்பதெல்லாம் தியாகுவின் சொல்லாடல்கள் . சக்தி-கௌசல்யா விவகாரத்தில் கொளத்தூர் மணியாருடன் சேர்ந்து நடத்திய பஞ்சாயத்தை எடுத்துப் பாருங்கள், புரியும் ! 2012 இல் ஒரு பாலியல் குற்றவாளியாக அறியப்பட்ட ஒருவருடன் சேர்ந்து, 2018 இல் 

இன்னொரு பாலியல் வழக்கில் பஞ்சாயத்துக்குப் போனது கொளத்தூர் மணியாரின் அறம் !தியாகு இதில் ஈடுபட்டது தொடர்பாக ஊரே சிரிப்பாய்ச் சிரித்த போது, ஒரு பாலியல் குற்றவாளியே ஒரு பாலியல் குற்றவாளிக்குத் தீர்ப்பு வழங்குகிறதே, அடடே, ஆச்சரியக்குறி என்று நான்கூட  கவிதை எழுதினேன் !சூக்குமம் என்னவென்றால், தன்மேலான விசாரணை நிலுவையில் இருப்பதை மறைத்து, இதில் ஈடுபட்டதன் மூலம், தியாகு குற்றவாளி நிலையிலிருந்து நீதிபதி நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார், அவ்வளவுதான் ! 

ஒரே கல்லில் பல மாங்காய்

நால்வர்குழு விசாரணையையும் ஐவர்குழு விசாரணையையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.  முன்னது, தியாகு 2012 இல் ஓடிப்போகும் முன்பு, அவர் நடவடிக்கைகளை விசாரிக்க அவரது இயக்கத்திலிருந்தே நால்வர் வந்தனர். விசாரணை முடிவில், அவர்மேலான பாலியல், நிதி மோசடி, பித்தலாட்டம், பொய்கள், வீண்பழி சுமத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்கிற முடிவுக்கு வந்து, அவரை இயக்கத்திலிருந்தே நீக்கினர். தொண்டர்கள் சேர்ந்து தங்கள் தகத்தகாய தலைவனை நீக்கிய வரலாற்றுச் சம்பவம் அது !

ஐவர்குழு என்பது,  வீட்டை விட்டு இரண்டாம் பெண்ணுடன் 2014 இல் ஓடியபிறகு, என் போராட்டத்தின் விளைவாக தியாகுவின் திருவிளையாடல்களை ஆராய 2015 இல் ஓவியர் வீரசந்தனம் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட குழு !. இன்னும் நிலுவையில் உள்ளது. தியாகுவை நீக்கிய 'இயக்க ஆவணத்தை' இணைத்திருக்கிறேன். அதன் பின்னும் தியாகு 'பொதுச்செயலாளர்' அடையாளத்தைச் சுமந்து திரிந்ததால், அதைக் கண்டித்து தோழர் மோகன்ராசு எழுதிய கடிதத்தையும் இணைக்கிறேன்.

 நான்கு மாதங்களில் தோழர் மோகன்ராசு கொல்லப்பட்டார் என்பது கூடுதல் செய்தி !. மேலும் தகவல்களுக்கு ததேவிஇ முன்னாள் தோழர்களைக் கேட்கலாம்.என குறிப்பிட்டுள்ளார், வைரமுத்து குறித்த தகவல்களை சின்மயி வெளியிட இன்று வைரமுத்து என்ற மனிதனின் உண்மை முகம் வெளி உலகிற்கு தெரிய உதவியது போல் விரைவில் சுபவீ போன்றோரின் உண்மை முகமும் மக்கள் முன்பு கவிஞர் தாமரை மூலம் வெளியாக போகிறது என்பது உறுதியாகியுள்ளது.

Share at :

Recent posts

View all posts

Reach out