Tamilnadu

"ஒரு கோடி" கேட்டு வழக்கு தொடர்ந்த "திருமாவளவன்" புட்டு புட்டு வைக்க போவதாக பாஜக பிரமுகர் உறுதி !

Thirumavalan
Thirumavalan

சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி - முருகேசன் ஆகியோா் ஆணவக் கொலை செய்யப்பட்டனா்.


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 13 போ் குற்றவாளிகள் என கடலூா் நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீா்ப்பளித்துள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீா்ப்பு குறித்தும், என்னைப் பற்றியும் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தடா டி.பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்குரைஞா் பி.ரத்தினம் உள்ளிட்டோா் அவதூறு பரப்பும் விதமாக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கருத்துக்களைக் கூறி வருகின்றனா். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மைகளை முழுமையாக விசாரிக்காமல் கடந்த காலங்களில் பதிவான அவதூறு தகவல்களை, மீண்டும் தற்போது உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் மறுபதிவு செய்து வருகின்றனா். எனவே என்னைப்பற்றி அவதூறு பரப்பியதற்காக ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்ப எதிா்மனுதாரா்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்,

அவா்களின் கருத்துக்களை வெளியிடக்கூடாது என சமூக வலைதளங்களுக்கும் தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுதாரரான தொல்.திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பக்கூடாது என எதிா்மனுதாரா்களான தடா டி.பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்குரைஞா் பி.ரத்தினம் உள்ளிட்டோருக்கு இடைக்காலத் தடை விதித்தும், இதுதொடா்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை ஜன.20-க்கு ஒத்திவைத்தாா்.

இந்த சூழலில் தன் மீது ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்ட திருமாவளவனுக்கு பாஜக பிரமுகர் தடா பெரியசாமி பதிலடி கொடுத்துள்ளார்,அதில்.,அன்பார்ந்த நண்பர்களே வணக்கம்! செய்தித்தாள்களில் (03/12/2021)  1-கோடி நஷ்ட ஈடு கேட்டு என்மீதும் வழக்கறிஞர் ரத்தினம் மற்றும் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு அவர்கள் மீதும் திருமாவளவன் வழக்கு கொடுத்துள்ளதாக  அறிந்தேன்.  நீதிமன்றம் வாயிலாக திருமாவளவனை அம்பலப்படுத்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. "என்னிடம் கோடிகள் இல்லை!  காவி கொடிகள் நிறைய உள்ளது!" 

கூடாநட்பு!  கேடாய் முடியும். என குறிப்பிட்டுள்ளார்,தடா பெரியசாமி உடன் பயணித்து பின்புதான் திருமாவளவன் அரசியல் பாதைக்கு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முரசொலி அறக்கட்டளை இடம் பஞ்சமி நிலம் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் கொடுத்தவர் தடா பெரியசாமி என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமாவளவன் வழக்கு தொடர்ந்து இதன் மூலம் அவரே பல உண்மை விவாகரங்கள் வெளியாக காரணமாக இருக்க போகிறார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.