தமிழக சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன நாளுக்கு நாள் ஒவ்வொரு கட்சியும் அதன் நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பரப்புரையில் இரவு பகலாக சுற்றி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை போட்டியிடும் அரவக்குறிச்சி தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது, திமுகவில் ஐக்கியமான செந்தில் பாலாஜி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதி இருப்பினும் அவர் தொகுதி மாறி இந்த முறை கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
அண்ணாமலை போட்டியிடுவதால் செந்தில் பாலாஜி தொகுதி மாறியதாக கூறப்பட்ட நிலையில்.. அதனை திமுக தரப்பு மறுத்தது.. அமைச்சர் விஜய பாஸ்கரை வீழ்த்தவே கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிட்டதாக விளக்கம் கொடுத்தனர், இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை என முதற்கட்டமாக அனைவரும் கூறிவந்த நிலையில் தற்போது அப்படியே மாறிவருகிறது அரவக்குறிச்சி நிலவரம்.
பள்ளப்பட்டியில் உள்ள இஸ்லாமியர்கள் பாஜகவிற்கு வாக்கு அளிக்கமாட்டார்கள் என திமுக வேட்பாளர் மிகுந்த தைரியத்தில் இருந்தார். நிலைமை இப்படி இருக்க பள்ளப்பட்டி பகுதிக்குள் சொன்னபடி நேற்று தனது கட்சி கொடியுடன் சென்று வாக்கு சேகரித்துள்ளார் அண்ணாமலை.. குறிப்பாக எங்கு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்களோ அதே இடத்தில் குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும் பள்ளப்பட்டிக்குள் அண்ணாமலை வர சில ஜமாத் நிர்வாகிகள் தடைவிதித்த நிலையில் அண்ணாமலையின் எச்சரிக்கையை தொடர்ந்து வாபஸ் பெற்றனர், இந்நிலையில் நேற்றைய தினம் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள்,இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பும் அண்ணாமலை நடத்திய கூட்டத்தில் கலந்து அதிக அளவில் கலந்து கொண்டனர்.
முத்தலாக் தடை சட்டம் மூலம் பயன் அடைந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் பலர்.., அண்ணாமலை நிகழ்ச்சியில் கையில் பிள்ளைகளுடன் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்வு நலம்பெற உதவ வேண்டும் என வலியுறுத்தினர், அவர்களின் குறையை கேட்ட அண்ணாமலை நான் வெற்றி பெற்ற 180 நாட்களில் இங்குள்ள 4 ஆயிரம் பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடு கட்டி தருவேன் அப்படி இல்லை என்றால் 181 வது நாளில் பதவியை ராஜினாமா செய்வேன் என அதிரடியாக தெரிவித்தார்.
அண்ணாமலையின் வாக்குறுதி அங்குள்ள இஸ்லாமிய பெண்களிடம் எதிரொலித்தது, இதை அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திமுக வேட்பாளர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் எப்படியும் இஸ்லாமிய சமூகம் வாக்குகள் திமுகவிற்கு செல்லும் என கூறப்பட்டு வந்த நிலையில் அண்ணாமலை பிரச்சாரம் செய்த இரண்டே நாளில்
பள்ளப்பட்டியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பாஜகவிற்கு வாக்கு அளிக்க தங்கள் முடிவை எடுத்திருப்பது பாஜகவிற்கு நிச்சயம் வெற்றியை கொடுக்கும் தொகுதிகளில் ஒன்றாக அரவக்குறிச்சியை மாற்றியுள்ளது. மேலும் அதிமுகவில் இருந்த செந்தில்நாதன் தற்போது பாஜகவில் இணைந்து அண்ணாமலைக்கு ஆதரவாக உள்ளூர் பிரமுகர்கள் முதல் திமுக முக்கிய நிர்வாகிகள் வரை அனைவரையும் பாஜகவில் சேர்த்து கடுமையாக களப்பணியாற்றி வருவது பாஜகவிற்கு களத்தில் முன்னேற்றத்தை கொடுத்துள்ளது.