Tamilnadu

உண்மையான ஒரிஜினல் விவசாயி எம்.எஸ்.ராஜேந்திரன்

Ijk
Ijk

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில், முதலமைச்சரைப்போல் பச்சைத் துண்டு மட்டும் போட்டுக் கொள்ளாமல், உண்மையான விவசாயியாக களமிறங்கி இருக்கிறார் ஐ.ஜே.கே வேட்பாளரும், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.ராஜேந்திரன்


கடந்த 70 ஆண்டுகளாக திமுக அதிமு, காங்கிரஸ் என 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் தொகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவர்கள் செயல்பட்டிருக்கிறார்களா அல்லது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. மக்களிடம் இருந்து விலகியிருப்பவர்களாகவே அந்தக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள்.

ஆனால், ஐ.ஜே.கே சார்பில் களமிறங்கியிருக்கும் எம்.எஸ்.ராஜேந்திரன் அப்படிப்பட்டவர் அல்ல. அடிபடையில் இவர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து இன்றைக்கும் விவசாயியாக வாழ்ந்து கொண்டிருப்பவர். கலசப்பாக்கம் தொகுதியான காரப்பட்டில் பிறந்து, இங்கேயே வளர்ந்தவர். சிறு வயதில் திமுகவில் சேர்ந்து, பின்னர் இந்திய ஜனநாயகக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ராஜேந்திரனுக்கு, 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளது. உள்ளூர்க்காரர் என்பதால், உள்ளூர் மக்களின் தேவைகள், பிரச்னைகள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி.

கலசப்பாக்கம் தொகுதியில் விவசாயம்தான் வாழ்க்கை. இங்கு கரும்பு விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. தொகுதியில் விளைந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கரும்புகள், போளூர் தரணி சர்க்கரை ஆலைக்கு விவசாயிகளால் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, இவர்களுக்கு அளிக்க வேண்டிய பணத்தை நிலுவையில் வைத்த ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு பட்டை நாமம் சாத்திவிட்டு ஆலையை இழுத்து மூடிவிட்டு ஓடிவிட்டது.

இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய ஆளுங்கட்சி, வாயை மூடிக்கொண்டு பதுங்கிக் கொண்டது. விவசாயிகள் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்று வேதனை பொங்கக் கூறுகிறார்

கரும்பைப் போலவே மல்லிகை, சாமந்தி, கோழிக்கொண்ட உள்ளிட்ட பல்வேறு வகை பூக்கள் கலசப்பாக்கம் தொகுதியில் விளைகின்றனர். இவற்றை பறித்த அன்றே திருவண்ணாமலை அனுப்ப வேண்டும் அல்லது பெங்களூர் அனுப்ப வேண்டும். இந்த மலர்களை பாதுகாத்து, பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், குளிரூட்டப்பட்ட கிடங்கு ஒன்று அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை. இதுவரை கோலோச்சிய ஆட்சியாளர்களால் அது நிறைவேற்றப்படாததால், ஒரு விவசாயியாக தான் அதை நிறைவேற்றித் தருவேன் என்கிறார் ராஜேந்திரன்.

அதேபோல், இலைக்காகவும் கனி மற்றும் காய்களுக்காகவும் மூன்றுவிதமான வாழைகள் கலசப்பாக்கம் தொகுதியில் பயிரிடப்படுகிறது. வாழை இலைகள் உடனடியாகத் திருவண்ணமலைக்கும் சென்னைக்கும் அனுப்பப்படுகிறது. இவற்றை இடைத்தரகர்கள் 100 ரூபாய்க்கு  வாங்கி 500 ரூபாய்க்கு விற்கும் அவல நிலை இருப்பதாகக் கூறும் ஐ.ஜே.கே வேட்பாளர் ராஜேந்திரன், இந்தப் பிரச்னையைத் தீர்க்க, உழவர் சந்தைபோல வாழைச் சந்தை அமைத்து, விவசாயிகளுக்கு அதிக அளவுக்கு வருவாய் கிடைக்க ஆவண செய்வேன் என்று உறுதி அளித்துள்ளார்.

ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மிருகண்டாநதிநீர் தேக்கம். ஆண்டுக்கு இரண்டு முறை தண்ணீர் திறக்கப்பட்டு, 17 ஏரிகள் நிரப்பப்படும். ஆனால், தற்போது, கால்வாய்கள் அனைத்தும் புதர் மண்டியும், மண் சரிந்து தூந்து போய் கிடப்பதால், தான் வெற்றி பெற்றவுடம் முதல் வேலையாக கால்வாய்கள் சீரமைக்கப்படும் என்கிறார் ராஜேந்திரன். 

4560 அடி உயரமுள்ள பர்வத மலையின் உச்சியில் பிரம்மராம்பிகை - மல்லிகார்ஜீனேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆனால் மலைக்கு செல்லும் சிமெண்ட் சாலைகள் மிகவும் சிதைந்து மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. மின்விளக்கு வசதியும் இல்லை. இங்கு 24 கிலோமீட்டர் உள்வட்ட கிரிவலச் சாலை அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். 

கலசப்பாக்கம் தொகுதியில் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு, மேல் படிப்புக்கு திருவண்ணாமலை, செய்யாறு மற்றும் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என உறுதியளிக்கிறார் ஐ.ஜே.கே வேட்பாளர் எம்.எஸ்.ராஜேந்திரன்.