
தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி திமுகவினர் என பலரும் அவர் வெறும் தபால் காரர் என கிண்டல் செய்து வந்தனர், மேலும் அவரிடம் உள்ள அதிகாரம் அனைத்தும் பிடுங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர் இந்த சூழலில் தான் நேற்று ஒரே நாளில் திமுகவிற்கு எதிராக வந்த 4 தீர்ப்புகள் ஒட்டு மொத்த திமுகவின் முதன்மை குடும்பத்தை கலங்க செய்து இருக்கிறது.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த 2024 செப்டம்பர் 26-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகவும் பதவியேற்றார்.
இந்த நிலையில், அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி ஜாமீ்ன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி உள்ளார். இதனால், அவருக்கு எதிராக சாட்சி அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் சாட்சிகளை கலைக்க முற்படுவதாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், ‘சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் இருந்தால், இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு வேண்டும்’ என வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினர், இந்நிலையில், ‘அவர் அமைச்சராக பதவியேற்பதற்காக அல்ல. மெரிட் அடிப்படையிலும் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அரசமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவை மீறியதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர், இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்தை தெரிவிக்க ஏப்.28 வரை கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் தான் வழக்கின் நிலை குறித்து கபில் சிபிளிடம் செந்தில் பாலாஜி பேசினார் அப்போது இனி உங்களுக்கு ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என கூற, முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் விட்டு கதறி இருக்கிறார் செந்தில் பாலாஜி அவரை ஸ்டாலின் நீங்கள் பதவியில் இல்லை என்றாலும் கட்சியில் உங்களுக்கு மிக பெரிய பொறுப்பு இருக்கு என கூறி தேற்றி இருக்கிறார்.
இவை ஒரு பக்கம் என்றால் ஆளுநர் ரவி திமுக அமைச்சர்கள் குறித்தும் திமுகவினர் மீது உள்ள வழக்குகள் குறித்தும் அவற்றிக்கான ஆதாரம் என பலவற்றை பக்காவாக திரட்டி உள்துறை அமைச்சகத்திற்கு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்திற்கும் தகவல் அனுப்பி இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.
- தபால் காரர் என திமுக கிண்டல் செய்த நிலையில் ஒரு ஒரு அமைச்சர் மீதான வழக்கை தபால் காரர் போன்று சிறப்பாக முடிக்க நாள் குறித்து இருக்கிறாராம் ஆளுநர் ரவி. இதில் முதல்வர் ஸ்டாலின் பெயர் தொடங்கி பல திமுக முக்கிய புள்ளிகள் விவரமும் உள்ளதாம்.