Tamilnadu

#BREAKING கிழி கிழியென கிழித்து எடுத்த ஆளுநர் "ஆமா நீங்க கொக்குதான்" வெளியானது பரபரப்பு தகவல்..!

stallin and rn ravi
stallin and rn ravi

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி குறித்து திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் முரசொலியில் விமர்சனம் செய்து இருந்தார்கள் மேலும் இது நாகலாந்து இல்லை தமிழ்நாடு எனவும் கொக்கென நினைத்தாயோ எனவும் எச்சரிக்கை தொனியில் கட்டுரை எழுதி இருந்தார்கள் இந்த சூழலில் ஆளுநர் கிழி கிழியென திமுக அரசின் செயல்பாட்டை விமர்சனம் செய்துள்ளார்.


குறிப்பாக மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் போனதற்கு காரணமே மாநிலத்தின் பாடத்திட்டம் சரியில்லை எனவும், மருத்துவத்தின் அடிப்படையே இயற்பியல், உயிரியல் வேதியியல்தான் அதில் இருந்து கேள்வி கேட்காமல் எதில் கேட்பார்கள்,  எகே ராஜன் கமிட்டி  காமாலை வந்தவனுக்கு அனைத்தும் மஞ்சளாக தெரிவது போல் இருப்பதாக இறங்கி அடித்துள்ளார் ஆளுநர் மொத்தத்தில் மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

1) நீட் திசையற்று செயல்படுகிறது, மருத்துவ கல்வி பெற உரிய தகுதி உடையோருக்கு எதிராக இருக்கிறது, பொருளாதாரமிக்க - சமூக அந்தஸ்துடன் இருந்து - படிப்பறிவுத்திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கே நீட்டால் அதிக ஆதாயம் இருக்கிறது உள்ளிட்ட பல்வேறு ஆதாரமற்ற விரிவான அனுமானங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2) இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கே நீட் தேர்வில் அதிக முன்னுரிமை கொடுப்பதாக நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது. மருத்துவத்துறையின் அடிப்படையே, அறிவியல் பாடத்திட்டம் என்பதாலேயே அப்படி நீட் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிபுணர் குழு, இதற்கு மாற்றான கூற்றை முன்வைத்து ‘அனைத்து பாடத்திட்டத்தையும்’ சேர்க்க வலியுறுத்துகிறது. நிபுணர் குழுவின் அப்பரிந்துரை, வினோதமாக இருக்கிறது. தகுதி நிர்ணயிமின்றி செயல்பட வழிவகுப்பது போல உள்ளது3) நீட் தேர்வு வருவதற்கு முன்பாக ஆண்டுக்கு 30 முதல் 38 அரசுப்பள்ளி மாணவர்கள், அதாவது மொத்த மாணவர்களில் ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளார்கள் என சில தரவுகள் சொல்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள், மருத்துவத்துக்கு குறைவாக சேருவதற்கு மாநில அரசின் கல்வித் திட்டங்கள் வழி வகுக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சமூக நீதி மறுப்பாக இருக்கும் இந்த நிதர்சனத்தை உணராமல், நிபுணர் குழு அறிக்கை நீட் தேர்வை குறை சொல்லியுள்ளது.

4) நீட் தேர்வு வந்த பிறகு சமூக நீதி மறுக்கப்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் கோச்சிங் செண்டர் மூலம் பயிலும் மாணவர்களுக்கே நன்மைகள் கிடைப்பதாகவும், அது கிடைக்காத ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் அறிக்கை சொல்கிறது. எது எப்படியாகியினும், நிபுணர் குழு அறிக்கை மாநில அரசு நடத்தும் பொதுத்தேர்விலும் இப்படியான கோச்சிங்தான் பிரச்னை என்ற நிதர்சனத்தை கூறாமல் கடந்துவிடுகிறது

இப்படியாக, நிபுணர் குழுவின் பார்வை முழுவதும் காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல, இருப்பதைவிட்டுவிட்டு வேறொன்றை பார்ப்பது கண்கூடாக தெரிந்துள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார் ஆளுநர்.

இதைத்தொடர்ந்து தனது அந்த ஆவணத்தில் வேலூர் கிறிஸ்துவ கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான எம்பிபிஎஸ் அட்மிஷன் குறித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவ கல்வி தரம் உயர்ந்திருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக `அரசியல் சட்ட விதி 46 மற்றும் 47 அவற்றின்படி பட்டியலின மக்கள் & பட்டியலின மலைவாழ் மக்கள் & பின்தங்கிய வகுப்பினர் ஆகியோர் நீட்தேர்வு வந்தபிறகு மெரிட் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ளார்கள். அரசியல் சாசனம் 51a உட்பிரிவு ஜே படி, நீட் தேர்வு அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். அதை தொடர்ந்து, நீட் தேர்வு பட்டியலின மக்கள் & பட்டியலின மலைவாழ் மக்கள் & பின்தங்கிய வகுப்பினர் ஆகியோரின் மருத்துவக் கனவுக்கு உயிர்கொடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய நலன் கருதி நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு எடுத்துள்ளது. எளியோரை காக்கவே நீட் உருவாக்கப்பட்டுள்ளது என்கையில், அதை உணர்ந்தே அதை நாடு முழுவது அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், மாநில அரசு அதை நிராகரிக்க உரிமை கோருவது எப்படி சரி?

இதுபோன்ற காரணங்களால், நீட் விலக்கு மசோதா மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இயற்றப்பட்டு இருக்கிறது எனக்கு தெளிவாக தெரிகிறது. இந்திய அரசியல் சாசனம் சட்டப்பரிவு 200 படி தான் நீட் வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே சட்டப்பேரவை தலைவர் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யவும் என மிக கடுமையாக மசோதாவை விமர்சனம் செய்து திருப்பி அனுப்பி இருக்கிறார் ஆளுநர்.

ஆளுநர் இப்படி கடுமையான வினார்சனங்களை வைத்த காரணத்தினால்தான் பிப்ரவரி ஒன்று அன்றே ஆளுநர் திருப்பி அனுப்பியும் தமிழக அரசு இது குறித்து வாய் திறக்காமல் மவுனமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் மாநில பாட திட்டம் தரமில்லை என ஆளுநர் சுட்டி காட்டி இருப்பதன் மூலம் அடுத்த புயல் அடிக்க தொடங்கியுள்ளது.

ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் கொக்கென நினைத்தாயோ என மிரட்டல் விடுத்த முரசொலிக்கு ஆமா நீங்க கொக்குதான் என ஆளுநர் நிரூபணம் செய்துள்ளார் என இப்போது பலரும் பரவலாக பேசி வருகின்றனர்.

More watch videos