அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வந்தார். 10 ம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார் பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்த சூழலில் அடுத்த வீடியோ ஒன்று வெளியானது அதில்.,என் பெயர் லாவண்யா. என் அப்பா பெயர் முருகானந்தம், அம்மா பெயர் சரண்யா. நான் மைக்கில் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறேன். எப்போழுதுமே நான் தான் முதல் ராங் எடுப்பேன். ஆனால், இந்த ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு என்னால் செல்ல முடியவில்லை. நான் தாமதமாக தான் சென்றேன்.
அதனால், எப்பொழுதுமே என்னை அங்குள்ள பணியாளர் (சிஸ்டர்) கணக்கு வழக்கு பார்க்க கூறுவார்கள். நான் தாமதமாக தானே வந்தேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் பிறகு எழுதித்தருகிறேன் என சிஸ்டரிடம் கூறுவேன். ஆனால், அவர் அதை கேட்கமாட்டார். பரவாயில்லை நீ எழுதிகொடுத்துவிட்டு உன் வேலையை பார் என்று அப்படி இப்படி எதாவது கூறி என்னை எழுதவைத்துக்கொண்டே இருப்பார்கள்.
நான் சரியாக எழுதினாலும், தவறு தவறு என்று கூறு ஒரு கணக்குக்கே ஒருமணி நேரம் அமரவைத்துவிடுவார்கள். இதனால், நான் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை. இதனால், நான் குறைவான மதிப்பெண் எடுத்துக்கொண்டே இருந்தேன். இப்படியே பொய்க்கொண்டிருந்தால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷத்தை குடித்துவிட்டேன்.
அந்த சிஸ்டர் பெயர் சகாய மேரி. பள்ளி தலைமை ஆசிரியர் பெயர் ஆரோக்கியமேரி. எல்லா வேலையையும் என்னையே செய்ய சொல்வார்கள். கேட் திறப்பதில் இருந்து மோட்டர் போட்டு அனைவரும் சாப்பிட்டபின்னர் மோட்டரை அணைப்பது என விடுதி வார்டன் எல்லா வேலையையும் என்னை தான் செய்ய சொல்வார். இது குறித்து வார்டனிடம் கேட்டால் நீதான் பொறுப்பாக இருக்கிறாய் என கூறுவார்.
பொங்கலுக்கு ஊருக்கு போகவேண்டும் என கேட்டதற்கு, நீ படிக்க வேண்டும் நீ இங்கேயே இரு என்று கூறி என்னை விடுதியிலேயே இருக்கவைத்துவிட்டனர். பொங்கலுக்கு எனக்கு உடம்பு சரியில்லை என சொல்லி அனுப்பவில்லை. விஷம் குடித்தது குறித்து விடுதி வார்டனுக்கு தெரியாது’ என்றார். இந்த புதிய வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதம் மாற மறுத்த காரணத்தால் மாணவியை பள்ளி நிர்வாகம் கொடுமை படுத்தி வந்ததாக அவரது பெற்றோர்கள் குற்றசாட்டு தெரிவித்து வருகின்றனர், மேலும் மாணவிசாகும் முன்பு கொடுத்த வீடியோ வாக்கு மூலத்தில் மதம் மாற்றம் குறித்து குறிப்பிட்டு இருந்ததால் இந்த வழக்கு தேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் சிலர் தாங்கள் ஊர் பொதுமக்கள் என கூறி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர், அதில் ஒற்றுமையாக உள்ள ஊரில் சிலர் மதம் மாற்றம் நடந்தது என கூறுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர், பள்ளியிலும் சரி ஊரிலும் சரி யாரும் மதம் மாற கட்டாயப்படுத்தவில்லை என குறிப்பிட்டனர்.
அங்குதான் அதிர்ச்சி காத்து இருந்தது ஊர் பெயர் மைக்கேல் பட்டி என குறிப்பிட்டு இருந்தனர், இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது 40 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணாரப்பேட்டை என்று இருந்த அந்த ஊரின் பெயர் எப்படி மைக்கேல் பட்டி என மாறியது இதை மாற்றியது யார் என்று புது சமூக வலைத்தளத்தில் புகார் கிளம்பியுள்ளது.
அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற ஊரின் பெயரே நீக்கப்பட்டு அந்த ஊர் மக்கள் கொல்லப்பட்டதாக காட்சி இருக்கும் அதே பாணியில் மைக்கேல் பட்டி என்ற ஊர் எப்படி புதிதாக வந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போது ஊர் பெயர் மாற்றமும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
அதே நேரத்தில் 1930 ம் ஆண்டு முதல் மைக்கேல் பட்டி என்றுதான் அந்த ஊரின் பெயர் இருப்பதாக பள்ளிக்கு ஆதரவான தரப்பு கூறுகிறது இது குறித்தும் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளதால் விரைவில் எது உண்மை எது பொய் என்ற நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம்.