பஜாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறவேண்டும் அவ்வாறு இல்லை எனில் சில நாட்களில் பாஜக அதிமுக இடத்தை பிடித்துவிடும் என பூவலகின் நண்பன் என்ற அமைப்பை சேர்ந்தவர் ட்விட்டரில் குறிப்பிட்ட நிலையில் அதற்கான காரணம் என்ன என தெரிவித்துள்ளார் சுந்தர் ராஜா சோழன், இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
இந்த கூட்டணி ஏற்கனவே 40% வாக்குகளை பெற்றுவிட்டது..10 வருட Anti incumbancy-யை தாண்டி 75 தொகுதிகளையும் NDA கூட்டணி வாங்கியது..இப்படியே போனால் அதிமுக+பாஜக கூட்டணி திமுக+காங்கிரஸ்ஸை எதிர்காலத்தில் வீழ்த்தும் என்பதை தெளிவாக உள்வாங்குகிறார் பூவுலகு.
செல்வி.ஜெவின் மறைவுக்கு பின்னால் அதிமுக இழந்த வாக்குகளை,வேறு வகையில் உள்ளே கொண்டு வரும் வினையூக்கியாக பாஜக உள்ளது.அதுமட்டுமல்ல பாஜக களத்தில் கடுமையாக ஏறி வருகிறது..2024 க்குள் பாஜக 10% வாக்குகளுக்கு மேலேயே நகரும்.
இப்படியே போகிற போது 2026 ல் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பலையை அப்படியே தங்களுக்கு சாதகமாக இந்த கூட்டணி பயன்படுத்திக் கொள்ளும்.இனி அதிமுகவால் தனித்து ஆட்சிக்கு வர முடியாது.ஆனால் டெல்லியில் மோடியை யாராலும் அசைக்க முடியாது,அவரின் ஆசிபெற்ற அண்ணாமலையின் வீச்சும் பெரிய அளவில் அன்று வளந்திருக்கும். இன்னும் பாஜகவிற்கு பல தேர்தல் வியூகங்கள் கூட அந்த நேரத்தில் இருக்கும்.
ஆகவே,இந்த கூட்டணி உடைவு மட்டுமே திமுகவை நெருங்கிப் பிடிக்க ஆளில்லை என்ற நிலையை உருவாக்கும் என அன்னார் அறிவார், அன்று சொன்னதுதான்,பாஜக தன்னை விழுங்கிவிடும் என்ற மாயக்கனவை அதிமுக கைவிட வேண்டும்.அந்த கருத்தை சொல்பவர்கள் உங்கள் உளவியலோடு விளையாடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார் சுந்தர ராஜ சோழன்.