ஆங்கில சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பங்கேற்பாளர்கள் தமிழில் பேசி கொண்டதும் காரசாரமாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டதும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வந்தார். 10 ம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார் பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது, இது குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரணையில் இறங்கியுள்ளது, மேலும் பாஜக தேசிய தலைமை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழுவையும் அமைத்துள்ளது.
இந்த சூழலில் ஆங்கில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் திமுகவை சேர்ந்த சரவணன் பல்வேறு குற்றசாட்டுகளை பாஜக மீது வைத்தார், பல்வேறு கேள்விகளை எழுப்பினார், அப்போது குறிகிட்ட நெறியாளர் ஆனந்த் நரசிம்மன் பாஜகவை நோக்கி இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள் மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது இதில் பாதி கேள்வியாவது கேட்டீர்களா?
மத மாற்ற குற்றசாட்டை தவிர்த்துவிட்டு கூட வேலை வாங்கிய, பாத்ரூம் கிளீன் செய்ய சொல்லிய நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து கேள்வி எழுப்பினார் இதற்கு சரவணன் கொடுத்த பதில்கள் ஆகியவற்றை கீழே வீடியோவில் பார்க்கலாம். தமிழ் ஊடகங்கள் செய்ய வேண்டிய பணியை ஆங்கில ஊடகங்கள் செய்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.