தமிழகத்தில் இருந்து சென்று டெல்லியில் தேசிய அரசியலில் ஈடுபட்டவர் சுப்ரமணியன் சாமி இவர் தொடர்ந்து பல விவகாரங்களில் பாஜக தலைமையின் கருத்தில் இருந்து முரணான தகவலை தெரிவித்து வந்து இருக்கிறார்.
இந்தியாவிற்கு எதிராக சீனா இலங்கை நாடுகளின் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, தமிழகத்தில் பாஜக எடுக்கும் கூட்டணி முடிவுகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவிற்கு ஆதரவான நிலைப்பாடு என பல இடங்களில் பாஜகவின் உள் விவகாரங்களில் தனி கருத்து தெரிவித்து வந்தார்.
பாஜகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் பலரின் மீது அனுபவம் அற்றவர்கள் எனவும் விமர்சனம் செய்து வந்தார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் விமர்சனங்களை முன்வைத்தார், இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது தனது சமூக வலைத்தளம் பக்கமான ட்விட்டரில் தொடர்ந்து சீனாவின் நடவடிக்கைகள் குறித்து எழுதி வருவதுடன் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தும் வருகிறார்.
இது பாஜகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, சுப்பிரமணியன் சாமி தொடர்ந்து பிரதமர் மோடியை தரம் தாழ்த்தி வரும் நிலையில் பாஜகவினர் சுப்பிரமணியன் சாமிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர், பாஜகவை சேர்ந்த தேசிய ஐ டி விங் தலைவர் அமித் மால்வியா சுப்பிரமணியன் சாமி கருத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த சு. சாமி அமித்மால்வியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைமைக்கு நாள் குறித்தார், ஆனால் பாஜகவோ அதனை நிராகரித்து விட்டது, அத்துடன் விரைவில் முடிவிற்கு வரும் சுப்ரமணிய சாமியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நீட்டித்து புதிதாக தேர்வு செய்யவும் மறுத்து விட்டது.
இந்நிலையில் தொடர்ந்து பிரதமர் மோடியின் புகழிற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக தவறான தகவல்களை சுப்பிரமணியன் சாமி பரப்பு வருவதாக மூத்த தலைவர்கள் தலைமையிடம் புகார் தெரிவித்துள்ளனர், இதன் அடிப்படையில் விரைவில் சுப்ரமணிய சாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய தேசிய தலைமை முடிவு எடுத்துள்ளதாம்.
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, சுப்ரமணிய சாமி மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது, இதனை முன்கூட்டியே யூகித்து கொண்ட சுப்ரமணிய சாமி, இப்போதே சிவசேனவுடன் நெருக்கம் காட்டி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற்று மீண்டும் நாடாளுமன்றம் செல்ல காய் நகர்த்தி வருகிறாராம்.