திமுகவின் உண்மை முகம் வெளிவந்தது என கூறி வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது, திமுகவை சேர்ந்த சாத்தூர் ராமசந்திரன் சாதி கூட்டம் ஒன்றில் பொது மேடையில் உரையாற்றுகிறார், அதில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வேலைகளிலும் தங்கள் சமூகத்தை சேர்ந்தவரை பணி அமர்த்துவோம் என்றும்.
உங்கள் சாதி என்ன என மட்டும் கூறுங்கள் பியூன் வேலை முதல் அரசாங்க வேலை வரை அனைத்து இடங்களிலும் உங்களை நானும் அண்ணன் நேருவும் பணியில் அமர்த்துவோம் என சர்ச்சையாக பேசியுள்ளார், அத்துடன் நான் தெலுங்கு மொழியில் தான் வாக்குகள் சேகரிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மொழியை காக்க அவதாரம் எடுத்து கொண்டதாக கூறப்படும் திமுகவின் முக்கிய தலைவர் ஒருவர் தான் தெலுங்கன் எனவும், தெலுங்கில் தான் வாக்கு சேகரிப்பேன், எனது சாதியை சேர்ந்தவர்களுக்கு அரசாங்க வேலையில் பணி அமர்த்தி கொடுப்பேன் எனவும் பொது வெளியில் மேடை போட்டு பேசியிருப்பது, திமுகவின் உண்மை முகம் தமிழ் முகமல்ல என்பதை குறிப்பதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் அரசு வேலையை சாதி பார்த்து கொடுப்பது குற்றம் எனும் நிலை இருக்க, பொது வெளியில் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாத நபருக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் என்ன ஆகும் இவர் அமைச்சராக ஒருவேலை வந்தால் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற பல்வேறு கேள்விகள் இணையத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன.
திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதே இதுபோன்ற சட்ட விதி மீரல்கள் என்றால் ஆட்சிக்கு வந்தால் அல்லது சாத்தூர் ராமசந்திரன் போன்றவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு கிடைத்தால் தமிழகத்தில் தமிழர்கள் வாழ முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது, இந்த வீடியோ தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு எதிர் கட்சிகள் கையில் சிக்கி இருந்தால் நிச்சயம் குறைந்தது தமிழகத்தில் 100 தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதித்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆ ராசா பேச்சு திமுகவிற்கு சேதாரத்தை உண்டாக்கியது போன்று தேர்தலுக்கு முன்பு சாத்தூர் ராமசந்திரன் பேசிய பேச்சு அவரது அமைச்சர் கனவிற்கு மட்டுமின்றி கட்சி பதவிக்கும் ஆப்பு வைக்குமா? என்பது விரைவில் தெரியவரும்.