தமிழகத்தில் அதிமுக சார்பில் அரசு விளம்பரமாக வெற்றி நடை போடும் தமிழகமே என்ற பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது, அதற்கு போட்டியாக ஸ்டாலின் தான் வாராரு என்ற பாடலை திமுக வெளியிட்டது, இந்த பாடல்கள் இணையம், ஊடகம், வானொலிகள் என அனைத்திலும் போட்டி போட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டன.
பாஜக சார்பில் வாங்க மோடி வணக்கங்க மோடி என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டார்கள் இணையம், தொலைக்காட்சி, ரேடியோ, தெருமுனை & ஆட்டோ ஸ்பீக்கர்கள் என்று எதிலுமே...''வெற்றிநடை போடும் தமிழகமே'' பாடலை கேட்க முடியவில்லை. அரசு செலவில் விளம்பரம் என்கிற வழக்கை தாண்டி இப்போது கட்சி சார்ந்த விளம்பரமாக கூட அப்பாட்டு ஒளி + ஒலி பரப்பாகவில்லை
அதே போல மோடி அரசின் மக்கள் நலத்திட்டங்கள் ஏராளம் இருந்தும் அதன் விளம்பரப் பாடல்கள் எதுவும் வெகுஜன ஊடகங்களில் ஒளி + ஒலி பரப்பாவதாக தெரியவில்லை தேர்தல் நேர அரசியல் ஆச்சரியங்கள். விளம்பரங்கள் அவசியமா ? என்று கேட்பவர்களுக்கு
விளம்பரங்கள் மூலம் வெற்றி பெறுவது குறித்த ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. சாமானிய மக்களின் மனதில் வெற்றி பெறக்கூடிய கட்சி என்கிற பிம்பம் ஏற்படுத்தும் எண்ணம் அவர்களின் வாக்குகளில் பிரதிபலிக்கும் அளவிற்கு வல்லமை வாய்ந்தது
இத்தகைய Perception war ல் தொய்வு ஏற்படக் கூடாது என்பது தேர்தல் நேர அரசியல் விதி என பானு கோம்ஸ் அதிமுக மற்றும் பாஜக தலைமைகளுக்கு புரியும் படி தகவலை பகிர்ந்துள்ளார் விழித்து கொள்ளுமா பாஜக அதிமுக தலைமைகள்.