தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது இதில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.அதன்படி திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி.
துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு உள்ளிட்ட 20 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முறை எப்படியும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தனது வேட்பாளர்களை தமிழக சட்டமன்றத்திற்குள் அனுப்ப தீவிரமாக களம் இறங்கியுள்ளது, அதன் படிதான் பாஜக அதிமுகவிற்கு அழுத்தம் கொடுக்காமல் வெற்றிக்கு தேவையான இடங்களை மற்றும் கேட்டு பெற்றுள்ளதாம்.
இதில் மதுரை வடக்கு, கோவை தெற்கு, ராமநாதபுரம் ஆகிய மூன்று இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என பாஜக தலைவர்கள் அதிமுக நிர்வாகிகளிடம் பேசி தொகுதிகளை பெற்றுள்ளனர், அதில் மதுரை வடக்கில் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் போட்டியிடலாம் எனவும் கோவை தெற்கில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடலாம் எனவும், இராமநாதபுரம் தொகுதியில் குப்புராம் போட்டியிட இருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, துறைமுகம், தளி, ஊட்டி ஆகிய தொகுதிகளில் தீவிரமாக RSS பணியாளர்கள் களம் இறக்க பட்டுள்ளனராம்.தொடக்கத்தில் கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க கூடாது என சில அதிமுகவினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.