பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அறிமுகமானவர் விக்ரமன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் முன்னிலையில் விசிகவில் இணைந்தார். இவர் மீது பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது காவல்துறை ஒன்றல்ல ரெண்டல்ல மொத்தம் 13 வழக்குகளின் கீழ் புகார் பதிவு செய்துள்ளனர்.ஊடக விவாத நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து பிரபலமான விக்ரமன் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளர் விக்ரமன்.
இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பதவியும் வகித்து வந்தார். இவர் அந்த சீசனில் அஸீம் மற்றும் விக்ரமன் இடையே பிக் பாஸில் இருந்த பிரச்சனை பெரிய அளவில் ரசிகர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பேசப்பட்டது. ஆனால் இறுதியில் அஸீம் தான் டைட்டில் ஜெயித்தார், விக்ரமனுக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்தது. இருப்பினும் விக்ரம் ரொம்ப நல்லவர் என்று மக்கள் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவரின் மற்றொரு முகத்தை மக்களுக்கு காட்டியுள்ளார்.
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி இவர் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவர் லண்டனில் ஆய்வுபட்டமும் பெற்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமனும் நானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் மொபைல் வாங்கினார்.
ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார்.இதுகுறித்து விக்ரமனிடம் கேட்டபொழுது சாதி ரீதியாக பேசி துன்புறுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க விசிக தலைமையிடத்தில் விக்ரம் மீது புகார் கொடுத்ததும் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் விட்டனர். தொடர்ந்து காவல் துறையிடமும் புகார் அளித்திருந்தேன் என்று தெரிவித்தார்.இந்நிலையில் அப்போது விளக்கம் கொடுத்த விக்ரமன்: கிருபாவும் நானும் நல்ல நண்பர்களாகவே பழகினோம். நான் அவரை காதலிப்பதாகவெல்லாம் சொல்லவில்லை. நெருக்கமான தொடர்பும் அவருடன் வைக்கவில்லை. நான் அவரிடம் 11 லட்சம் பணம் வாங்கியதாக கணக்கு காட்டினார். இது தான் உண்மை என்று தெரிவித்தார்.
தற்போது கிருபா யாரிடமும் சொல்லி நடவடிக்கை எடுக்காததால், சென்னை நீதி மன்றத்தை நாடி புகார் தொடர்ந்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விக்ரமன் மீது கற்பழிப்பு, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவர் மீது பதிவு செய்யப்பட்ட அணைத்து வழக்குகளும் சாதாரண வழக்குகள் கிடையாது. இந்த வழக்கினை கொண்டு கைது செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. இவரை காப்பாற்ற விசிக கட்சியினர் முயன்று வருவதாகவும், அவர்களுக்கு எதிராக பொதுமக்களின் பார்வை திரும்பும் என்பதால் விக்ரமனுக்கு உதவ விசிக கைவிட்டதாக கூறப்படுகிறது.