Politics

தந்தைக்காக அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேலுமணி மகள்..! இவர் தான் SP வேலுமணி மகளா?

தந்தைக்காக அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேலுமணி மகள்..! இவர் தான் SP வேலுமணி மகளா?
தந்தைக்காக அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேலுமணி மகள்..! இவர் தான் SP வேலுமணி மகளா?

நடப்பு சட்டமன்ற பொது தேர்தல் நாளுக்கு நாள் விறுவிறுப்பு கூடி வருகிறது,இதில் நேற்று தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக அவரது மகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டது, தொகுதிக்கு தனது தந்தை என்ன செய்தார் என்பனவற்றை பட்டியல் போட்டது ஆகிய பேச்சுக்கள் பார்ப்போரை ரசிக்க செய்தது.


கோவை சுகுணாபுரம், மைல்கல் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியுடன் அவரது மகள் சாரங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தொகுதி மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை முடிந்தவரை அப்பா நிறைவேற்றியுள்ளார். வரும் நாட்களிலும் நிறைவேற்றித் தருவார். அதிமுக அரசு மக்கள் நலனுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளனர். அரசுப் பள்ளிமாணவர்களின் மருத்துவக்கனவை நனவாக்கியுள்ளனர். நிறைய இடங்களில் அம்மா மினி கிளினிக் கொண்டுவந்துள்ளனர்.

குளங்களை தூர்வாரியுள்ளனர். தற்போது அனைத்து குளங்களிலும் நீர் உள்ளது. கரோனா காலத்திலும் அரசு சிறப்பாக செயல்பட்டது. கரோனா காலத்தில் உங்கள் அனைவரையும் குடும்பத்தில் ஒருவராகநினைத்து முடிந்த அளவு உணவுப்பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை அளித்தார். கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், கல்லூரி களை அதிகப்படுத்தியுள்ளார். அரசு அலுவலகங்கள் மேம்படுத் தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சாலைகள், பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எல்லோரும் திட்டங்களைநிறைவேற்றுவோம் என்பார்கள். ஆனால், வாக்குறுதி அளித்தபடி திட்டங்களை நிறை வேற்றுவது அதிமுக அரசுதான்.கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 ஆண்டுகளில் நிறை வேற்றிக்கொடுத்துள்ளார்.

இந்தியாவில் உள்ளாட்சித் துறையில் அதிக விருதுகளை வாங்கியுள்ளார். இவையெல்லாம் மக்களின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமாகியுள்ளன. உங்களில் ஒருவராக அவர் எப்போதும் இருப்பார். அனைத்து தேர்தல் களிலும் அவரை நீங்கள் வெற்றிபெற வைத்துள்ளீர்கள் என்று அவர் பேசினார்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தொண்டாமுத்தூர் பகுதியில் அமைச்சர் வேலுமணியை ஆதரித்து அவரது மகள் மேற்கொண்ட பிரச்சாரம், கவனிக்கதக்க வகையில் இருந்ததாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதட்டி உற்சாக படுத்தினர். தந்தைக்காக மகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.