1998 ல் மும்பை ரயில்நிலைய குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட அஃப்டாப் சயீத் அஹமது எனும் குற்றவாளி நாசிக் ரோடு சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
2020 செப்டம்பர் 19ல் நாசிக் ஜெயில் சூப்பரின்டெண்ட் அஃப்டாப்பின் பரோல் மனுவை மும்பை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
டிவிசன் பெஞ்ச் நீதிபதிகளான SS ஷின்ட்லே மற்றும் மனிஷ் பிடாலே ஆகிய இருவரும் இந்த வழக்கை விசாரித்தனர்.குற்றவாளி தரப்பில் ஆஜரான அபிஷேக் படாங்(Legal Aid panel) அஃப்டாப்க்கு பரோல் கேட்டு வாதாடினார்.
நான்கு முறை அவருக்கு பரோல் வழங்கப்பட்டதாகவும், மூன்றுமுறை வழங்கப்பட்ட நேரத்தில் சரண்டர் ஆனதாகவும், ஒரு முறை 14 நாட்கள் தாமதமானதாகவும் தெரிவித்தார்.அதற்கு எதிராக பப்ளிக் ப்ராசிக்யூட்டர் சிறைதரப்பு வாதங்களை எடுத்துரைத்தார்.
குற்றவாளி வெளியே வந்தால் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.அதனால் மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சிறைத்துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு குற்றவாளிக்கு முப்பது நாட்கள் பரோல் வழங்கி தீர்ப்பளித்தனர்.