Politics

பாஜகவில் பத்மபிரியா தொண்டர்கள் எதிர்பால் விரக்தி!!!

பாஜகவில் பத்மபிரியா தொண்டர்கள் எதிர்பால் விரக்தி!!!
பாஜகவில் பத்மபிரியா தொண்டர்கள் எதிர்பால் விரக்தி!!!

தமிழக தேர்தல் முடிவில் மக்கள் நீதி மையத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர், இந்த நிலையில் அந்த வரிசையில் சுற்று சூழல் போராளியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட பத்மபிரியா தற்போது மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


மக்கள் நீதிமய்யம் மூன்று சதவிகித வாக்குகளை பெறாதது அந்த கட்சிக்கு எதிர்காலம் இல்லை என கருதுவதால் பலர் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து வெளியேற காரணம் என கூறப்படுகிறது, இந்த நிலையில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிட்ட பத்மபிரியா டெபாசிட் இழந்தார்.

விரைவில் கமல் கட்சியை கலைத்து விடுவார் என கூறப்படும் நிலையில் முன்பே வெளியேறி வேறு கட்சியில் இணையலாம் என பலர் முடிவெடுத்து விட்டதாகவும் அந்த வகையில் பத்மபிரியா, திமுக, அதிமுக, பாஜக என எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு சேர்ந்து தனது அரசியல் எதிர்காலத்தை பலப்படுத்தி கொள்ள முயற்சித்து வருகிறாராம்.

இந்நிலையில் பத்மபிரியா பாஜகவில் சேருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி உண்மை என்றால் அவரை பாஜகவில் சேர்க்க கூடாது என இப்போதே பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், சுற்று சூழல் போராளியாக முழுமையாக சட்டத்தை அறியாமல் பேசியவர் பத்மா மேலும் நடிகர் சிவகுமார் குடும்பத்தின் சிபாரிசின் பேரிலேயே பத்ம பிரியா இயங்கி வருவதாக உறுதி படுத்தாத தகவல் பல நாட்களாக இருந்து வருகிறது.

எனவே பாஜகவில் சேர்ந்து இக்கட்டான நிலை ஏற்பட்டால், கட்சி மீது பழியை போட்டு பத்மபிரியா வேறு கட்சிக்கு தாவி விடுவார், கொள்கை பிடிப்பு இல்லாத நபர்களை கட்சியில் சேர்ப்பது மிகவும் தவறான முடிவை உண்டாக்கும் எனவும் பாஜக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜகவில் சேர பத்மபிரியா முயற்சி செய்தாரா இல்லை வேறு கட்சிக்கு தாவ இருக்கிறாரா என்பது உள்ளாட்சி தேர்தலுக்கு முன்போ அல்லது சிறிது காலத்திலோ தெரிந்துவிடும்.