Tamilnadu

#Breaking விரட்டி அடித்தது இந்தியா வெளியான பரபரப்பு தகவல்!

modi and Xi Jinping
modi and Xi Jinping

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் காலூன்ற நினைத்த சீனாவை இந்தியா விரட்டி அடித்த பரபரப்பு சம்பவம் வெளியாகியுள்ளது, இது குறித்து எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :- இலங்கையின் வடபகுதியில் காலுன்ற முயன்ற சீனாவினை விரட்டி அடித்திருக்கின்றது இந்தியா சீனாவின் கந்துவட்டியில் அகபட்ட நாடுகள் மூச்சு முட்டிகொண்டிருக்கின்றன, இதில் சால்மன் தீவு போன்ற நாடுகளில் சீனாவினை மக்களே விரட்டி அடிக்கும் காட்சிகள் உண்டு, பாகிஸ்தானில் கூட இது நடக்கின்றது, சீனாவின் அணுமுகுறை ஒருமாதிரியானது, சம்பந்தபட்ட நாட்டிடம் செல்வார்கள் உலகவங்கியினை விட குறைந்த வட்டிக்கு காசுதர தயாராக இருப்பதாகவும் தங்கள் பணத்தை சம்பந்தநாட்டில் கொட்டி அவர்களை வளர்க்க வந்திருப்பதாகவும் பேசுவார்கள்.


இந்த வங்கிகடனுக்கு இனிக்க இனிக்க போனில் பேசுவார்கள் அல்லவா? அதேதான், உங்கள் நாட்டில் ரயில் நிலையம் துறைமுகம் எல்லாம் அமைக்கின்றோம், எங்கள் பணத்தில் அமைக்கின்றோம் நீங்கள் அனுமதிமட்டும் தந்தால் போதும் முடிந்தால் வட்டியும் கொடுங்கள் என மெல்ல வருவார்கள் பின் கால் ஊன்றிவிட்டு சுயரூபம் காட்டுவார்கள்,கவனியுங்கள் இது அந்த நாட்டில் இவர்கள் செய்யும் வேலை, அந்த வேலைக்கு வலிய சென்று அந்நாட்டையே மிரட்டுவார்கள், சில நாடுகள் இதற்கு அஞ்சி தங்கள் துறைமுகம் விமானநிலையமெல்லாம் அவர்களுக்கு லீசுக்கு கொடுத்துவிட்டு அழுது கொண்டிருப்பார்கள்

இப்படி நேபாளம் சிக்கியதை இந்தியா படையப்பா ரஜினி ஸ்டைலில் சூட்கேஸோடு சென்று அவர்களை மீட்டது  அதை தொடர்ந்து இலங்கையிலும் அதை செய்தது, இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை தன் அடாவடியால் வளைத்த சைனா வட இலங்கைக்கும் வந்தது அது இந்தியாவில் இருந்து வெறும் 39 கிம் தொலைவு என்பதுதான் விஷயம், இந்தியா இந்த இடத்தில் அடித்து ஆடியது, சீனாவுக்கு கொடுக்கவேண்டிய கடனுக்காக தவித்த இலங்கைக்கு உதவி சீனாவுக்கு செல்ல இருந்த வடக்கு பகுதியினை இந்தியா மீட்டது

வடக்கே "சினோ சோ ஹைப்ரிட் டெக்னாலஜி" எனும் நிறுவணம் சோலாஸ் சிஸ்டம் உள்ளிடவற்றை நிறுவும் வாக்கில் வந்தது அதை இந்தியாமுறியடித்தது, இப்பொழுது இந்த வாய்ப்பு இந்திய அதானி குழுமத்துக்கு வழங்கபட்டுள்ளது, இந்த செய்தியினை இலங்கை பாராளுமன்றம் தெரிவித்துள்ள நிலையில் இலங்கை சீன தூதரகமும் இதை உறுதி செய்துள்ளது, இனி இருவகை காமெடிகளை தமிழகத்தில் காணலாம் முதலாவது மோடி அதானிக்கு வியாபார வாய்பினை வாங்கி கொடுத்துவிட்டார் என ஒரு கோஷ்டி உறுமும் , சரி இந்த மிகபெரிய தொழிலை செய்ய தமிழகத்தில் எந்த குழு உண்டு? யாரிடம் அவ்வளவு அனுபவம் உண்டு என்றால் பதிலே வராது, இங்கே டிவி சேனலும் கிரிக்கெட்டும் வளர்ப்பவர்கள் ஏன் இம்மாதிரி பெரும் தொழிலை வளர்க்கவில்லை என்றாலும் சத்தம் வராது. என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.