மாரிதாஸ் கைது செய்யபட்டதை கொண்டாடிய நபர்கள் தற்போது மிகுந்த வேதனையில் தூக்கமின்றி புலம்பும் சூழலை உருவாக்கி இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கொடுத்த தீர்ப்பு, ட்விட்டர் பதிவிற்கு தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது செல்லாது எனவும், இது திட்டமிட்ட காவல்துறையின் நடவடிக்கை என கூறி மாரிதாஸ் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்த தீர்ப்பு மாரிதாஸ் தரப்பிற்கு மகிழ்ச்சியை கொடுத்தது என்றால். நெறியாளர் மற்றும் யூடுப்பராக பணியில் இருக்கும் செந்திலுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, எப்படியும் ஆளும் அரசாங்கம் குண்டர் சட்டத்தில் மாரிதாஸை கைது செய்வார்கள் என நம்பிக்கையோடு இருந்து இருக்கிறார் செந்தில் ஆனால் அவரது கனவில் மண்ணள்ளி போட்டு விட்டது உயர் நீதிமன்றம்.
இதையடுத்து சமூக வலைத்தளத்தில் நேரடியாக கருத்து சொல்லமுடியாமல் மறைமுகமாக கருத்தை பதிவு செய்து வருகிறார் செந்தில் குறிப்பாக..உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு ஒன்றை உறுதிப்படுத்துகிறது. கைதுசெய்யப்பட்ட யு டியூபர் தமிழக அரசை நோக்கி வைத்த அதே விமர்சனத்தை மோடி அரசை நோக்கியோ, இன்ன பிற மாநில அரசுகளை நோக்கியோ யாரேனும் வைத்தாலும் தவறில்லை . அவ்வாறு கருத்திடுவதற்கான சட்டப் பாதுகாப்பை இத்தீர்ப்பு வழங்கியுள்ளது என அவரே கூறி சுய சந்தோசம் அடைந்து இருக்கிறார்.
மேலும் ஒரு பதிவில்..ஹெச் . ராஜா வின் சித்தாந்தத்தோடு முரண்படலாம். அதற்காக அவர் சொல்லும் அனைத்து கருத்துகளும் தவறு என்று சொல்ல இயலாது. அவர் சொன்ன கருத்துகள் சில சரியானதாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை.அதான…. அதேதான் என அவரே குறிப்பிட்டு புலம்பி இருக்கிறார் இது தவிர்த்து பல யூடுப் சேனலில் புலம்பியும் வருகிறார் செந்தில். மொத்தத்தில் மாரிதாஸ் செந்திலின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் என்பது அவரது புலம்பல்களில் இருந்தே தெரியவந்துள்ளது.. ஆமாம் புகார் கொடுத்த திமுகவினரே அமைதியாக இருக்கும் போது.. செந்தில் ஏன் இப்படி புலம்புகிறார் மாரிதாஸ் மூலம் கிடைத்த அடி அப்படியோ என நெட்டிசன்கள் செந்திலை நோக்கி கிண்டல் அடித்து வருகின்றனர்.