Tamilnadu

#BREAKING அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு!

Annamalai
Annamalai

தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்க டெல்லி பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கர்நாடக மாநிலத்தில் IPS பணியில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த அதிகாரி அண்ணாமலை அந்த பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார், அதன் பிறகு சமூக சேவையில் ஈடுபட்ட அண்ணாமலை, பின்பு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் சென்று தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது, அத்துடன் அவருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டது, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தேர்தல் தோல்விக்கு பிறகு டெல்லி தலைமைக்கு கிடைத்த தகவலில், அண்ணாமலை அரவகுறிச்சி தொகுதியில் போட்டியிடாமல் கிணத்து கடவு அல்லது கொங்கு மண்டலம் பகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார் எனவும், இஸ்லாமியர்கள் வாக்குகளே அண்ணாமலை வீழ்வதற்கு காரணமாக அமைந்தது என கூறப்பட்டது.

இந்நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு தயாராக பாஜக தலைமை கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, இந்த முறை தென் மாநிலங்கள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அதிக இடத்தை பிடிக்க பாஜக முடிவு செய்துள்ளது, எனவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில்..,

தற்போது இருந்தே ஆளும் அரசாங்கத்தின் குறைபாடுகளை மக்கள் மன்றத்தில் சுட்டி காட்டவும், ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்துவது குறித்த வழிமுறை குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது, இதில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மீது எது போன்ற அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என முடிவு எடுக்கவும், வியூகம் வகுக்கும் பொறுப்பு அண்ணாமலையிடம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது திமுக தலைவர் ஸ்டாலின் அவரது கட்சியினர் எவ்வாறு மத்திய அரசை விமர்சனம் செய்தார்களோ, அதே போன்று விமர்சனத்தை முன்வைக்கவும் கூடுதலாக எதிர்க்கட்சியாக இருக்கும் போது வைத்த கோரிக்கையை ஆளும் கட்சிக்கு நினைவு படுத்தவும் அது மட்டுமின்றி வரும் காலங்களில் மத்திய அரசு vs மாநில அரசு என்ற அடிப்படையில் விவாதங்களை முன்னெடுத்து அரசியல் களத்தில்  திமுக vs பாஜக என மாற்றம் செய்ய பல்வேறு அறிவுரைகளை டெல்லி பாஜக தலைமை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.