தேசிய புலனாய்வு முகமையின் புதிய கிளை சென்னையில் தொடங்கப்பட்டது, இந்தியாவில் பிடிப்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களில் பெரும்பாலோனர் தமிழகத்தில் இருந்து பிடிபட்டது, உளவு அமைப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது மேலும் தென் மாநிலங்களை குறிவைத்து ஒரு குழு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதும் கண்டறியபட்டது இதையடுத்து சமூக வலைத்தளம் முதல் அனைத்து இடங்களையும் தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கண்டறிய மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்தது.
அதன்படி தேசிய பாதுகாப்பு முகமையின் புதிய கிளை தமிழகத்தில் தொடங்கப்பட்டு இதற்கென தனியாக அதிகாரிகள், பொறுப்புகள் கொடுக்கப்பட்டன, பொறுப்பு ஏற்ற மறுநாள் முதல் NIA அதிகாரிகள் செயலில் இறங்கினர் குறிப்பாக தமிழகத்தில் சமூக ஊடகங்களில் நாட்டிற்கு எதிராக கருத்து தெரிவிப்போரை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது.
அதன் எதிரொலி தற்போது மதுரையில் அரங்கேறியுள்ளது ,தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை(நேற்று ) நான்கு இடங்களில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் மற்றும் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் வீடுகளில் இருந்து சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
ஜனநாயகத்திற்கு எதிராக இளைஞர்களைத் தூண்டிவிட்டதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆதரவாக தூங்கா விழிகள் ரெண்டு என்ற தலைப்பின் கீழ் பேஸ்புக் பதிவுகளைப் பகிர்ந்ததற்காக முகமது இக்பால் மற்றும் இன்னொருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நகர காவல்துறையினரிடமிருந்து என்ஐஏ எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தொடர்பாக, அதிகாரிகள் தொடர்புடையவர்கள் வீடு மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் காசிமர் தெரு, கே.புதூர், பெத்தானியாபுரம் மற்றும் மதுரையில் உள்ள மகாபூபாலயம் ஆகிய இடங்களில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க்குகள், மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள், பென் டிரைவ் மற்றும் குற்றச்சாட்டு ஆவணங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் நான்கு இடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேடல் தொடர்ந்தது. அவர்களும் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்திருக்கிறார்களா என்று சோதிக்க அவரது கூட்டாளர் வீடுகளிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் நாட்டிற்கு எதிராக பிரிவினையை தூண்டும் முக நூல் பக்கங்களின் அட்மின் தொடங்கி அதில் தவறான கருத்து பதிவிடுவோர் வரை குறிவைத்து ஒரு குழு களத்தில் இறங்கியுள்ளது, இனிபலர் கைது செய்யப்படலாம் எனவும் அவர்களின் பின்னணி தொடர்புகள் குறித்து விரைவில் வெளி உலகிற்கு தெரிவிக்க படலாம் எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் NIA அமைப்பின் புதிய கிளை ஏன் தொடங்கப்பட்டது என இப்போது தெரிந்துருக்குமே?