Politics

பிரச்சாரம் சம்பவம் எதிரொலி அடுத்தது என்ன செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை !! குவியும் மக்கள்!!

பிரச்சாரம் சம்பவம் எதிரொலி அடுத்தது என்ன செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை !! குவியும் மக்கள்!!
பிரச்சாரம் சம்பவம் எதிரொலி அடுத்தது என்ன செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை !! குவியும் மக்கள்!!

அதிமுக பாஜக கூட்டணி சம பலத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில் கரூர் மாவட்டம் அரவகுறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.


தொடக்கத்தில் பாஜக வேட்பாளர் நிற்பதால் எளிதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று விடலாம் என திமுக காங்கிரஸ் கூட்டணி கணக்கிட்டு வேலை செய்தது, ஆனால் திமுகவின் அடிப்படை வாக்கு வங்கியாக கணிக்கப்படும் இஸ்லாமிய வாக்கு வங்கியே அண்ணாமலையின் வரவால் ஆட்டம் கண்டது, இஸ்லாமிய பெண்கள் பெருமளவு அண்ணாமலை நடத்திய கருத்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து திமுகவின் தூண்டுதலால் ஜமாத் நிர்வாகிகள் பாஜக வாக்கு கேட்டு பள்ளப்பட்டிக்குள் வரக்கூடாது என நோட்டீஸ் அனுப்ப அதனை முறியடுத்து பள்ளப்பட்டி பகுதிக்குள் பாஜக வாகனம் செல்லும் என அறிவித்தார் அண்ணாமலை அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் பள்ளப்பட்டி நோக்கி செல்வதாக அறிவிக்க அறிவிப்பை வாபஸ் பெற்றது ஜமாத் நிர்வாகம்.

இந்நிலையில் தனது முதல் முயற்சியில் தோல்வி அடைந்ததாக கூறப்படும் சிலர் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக வினரால் தாக்கப்பட்ட பாஜக வினர் மற்றும் அதிமுக வினரை நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்த பாஜக மாநில துணை தலைவரும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருமான அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது., தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும் பட்சத்தில், கரூர் மாவட்டத்தில் கரூரிலும், அரவக்குறிச்சி ஆகிய இரு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜியின் சொல்லிற்கிணங்க, ஆங்காங்கே அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், ஆகவே தலைவர்கள் எவ்வளவு தான் தொண்டர்களுக்கு சொன்னாலும் சரி, தொண்டர்கள் பொறுத்து தான் போவார்கள், ஆனால் ஒரே போல பொறுத்து போக மாட்டார்கள். இந்த தேர்தலில் தோல்வி பயம் செந்தில்பாலாஜிக்கு தெரிந்ததால் கரூரிலும் சரி,

அரவக்குறிச்சி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் வன்முறை கட்டவிழ்த்து அதன் மூலம் தேர்தலை நிறுத்த சதி தீட்டுகின்றார் என்றார். மேலும், இதே போல, தொடர்ந்து செந்தில்பாலாஜி வன்முறையை தூண்டி விட்டால் இது தான் செந்தில்பாலாஜிக்கு கடைசி தேர்தல் ஆக இருக்கும் என்றதோடு, இனி அவர் தேர்தலில் நிற்க மாட்டார் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

தொடர்ந்து அரவக்குறிச்சி பகுதிகளில் அடாவடி ஆட்டத்தை செந்தில்பாலாஜி கட்டவிழ்த்து விடுவதாக. எழுந்துள்ள குற்றசாட்டு திமுகவிற்கு பிற பகுதிகளிலும் தோல்வியை தருமோ மீண்டும் ரவுடியிசம் தலை தூக்கும் என பொது மக்கள் அச்சப்பட்டு வாக்குகள் விழாதோ என திமுக தலைமை அதிர்ச்சியடைந்து உள்ளதாம்.