தாராபுரம் பகுதிகளில் எல் முருகனை ஆதரித்து வேலூர் இப்ராஹிம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார் இவரை ஆதரித்து தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்நாடு மாநில தலைவர்,இப்ராஹிம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அவர் பாஜகவின் துண்டு பிரசுரங்களை விநியோகித்தது தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.அவர் கூறுகையில் முஸ்லீம் இந்து ஒற்றுமைக்காக துணை நிற்போம் அதற்காக நம் தாமரை சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க நான் வந்துள்ளேன் எல்லோரும் நமது கோவை தொகுதியில் நமது சகோதரி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும் என அவர் மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி பிஜேபி எனும் சூழல் நிலவி வரும் நிலையில் இப்ராகிம் அவர்கள் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பது மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.