கொரோனவை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், கொரோனாவிற்கு தேவையான தடுப்பூசியை கண்டறிந்தும், அதனை தனது நாட்டுமக்களுக்கு இலவசமாக வழங்கியும் உலக அளவில் தனி சாதனை படைத்துள்ளது இந்தியா, உலகின் பல்வேறு நாடுகளும் நமது நாட்டின் தயாரிப்பான கோவிஷில்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றை ஆர்டர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்தியாவின் தடுப்பூசியை தற்போதுவரை அங்கீகரிக்கவில்லை, இதன் பின்னணியில் சீனா உட்பட பல நாடுகளின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது எனினும் தனது நாட்டு மக்களுக்கு சொந்த தயாரிப்பு தடுப்பூசியை செலுத்தி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சாதனை செய்துள்ளது.
இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் செயல்பாடு இந்திய மக்களையும், இந்திய தரப்பையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பானது, ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா ஆகிய தடுப்பூசிகளை மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்காக அங்கீகரித்துள்ளது. இதனால் இந்தியா, துருக்கி, ஜோர்டான், தாய்லாந்து, ரஷ்யா, போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்கள் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்படுகின்றனர்.
கரோனாவுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.கரோனாவுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு கட்டாயப்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்த்தன் சிரிங்கலா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது இதுகுறித்து கூறியதாவது:
பிரிட்டனில் கோவிஷீல்டு அங்கீகரிக்கப்படாதது பாரபட்சமான செயல். இது, பிரிட்டன் செல்லும் நமது குடிமக்களை பாதிக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தை பிரிட்டனின் வெளியுறவு செயலாளரிடம் பேசியுள்ளார். பிரிட்டன் வரும் இந்தியர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையில் மாற்றம் செய்வதாக அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.
இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இந்தியாவின் நடவடிக்கை வேறு விதமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார், இதற்கிடையில் தொடர்ந்து இந்தியா எதுபோன்று உலக நாடுகளுக்கு கொரோனா நேரத்தில் உதவி செய்து வந்துள்ளது குறிப்பாக இங்கிலாந்து நாட்டிற்கு என்னென்ன உதவிகளை செய்துள்ளது என பட்டியல் இட்டுள்ளார் ஜெய்சங்கர்.
அப்போது இந்தியாவின் தயாரிப்பான கோவி ஷில்ட் மற்றும் கோ-வாக்சின் ஆகிய தடுப்பூசிகளின் செயல்பாட்டையும் அது இந்தியர்களை காக்கும் விதம் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார் இறுதியாக அனுமதிக்க முடியுமா முடியாது என்றாலும் சொல்லிவிடுங்கள் நாங்கள் வேறு வகையில் பார்த்து கொள்கிறோம் என கூறியுள்ளார் ஜெய்சங்கர்.
இதன் பிறகு விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளது பிரிட்டன் தரப்பு. மோடியின் புதிய இந்தியாவின் முன்னேற்ற நிலை குறித்து பிரிட்டன் அரசிற்கு தெளிவாக எடுத்து கூறிவிட்டார் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்.