தமிழக அரசியல் களம் புதிய ஆளுநர் வருகையால் அதிர்வலைகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது அதில் குறிப்பிடப்படும் தகவல்கள் ஆளும் கட்சியின் முக்கிய தலைகளை பற்றி குறிப்பிட்டுள்ளதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது ஆளும் தரப்பு ,பரவி வரும் தகவல்கள் பின்வருமாறு :- .
தமிழக டி.ஜி பி சைலேந்திரபாபுவிடம், ஆளுநர் ரவி எச்சரிக்கை தமிழக ஆளுநர் ரவி டி.ஜி.பி சைலேந்திரபாபுவை அழைத்து பேசினார். மத்திய அமலாக்கத்துறை தமிழக அமைச்சர்கள் நான்கு பேருக்கு சம்மன் அனுப்பியிருப்பதை எடுத்து கூறியிருக்கிறார். நான்கு அமைச்சர்களும் அமலாக்கத்துறையில் ஆஜராகவில்லை என்றால் அவர்கள் கைது செய்யப்படலாம் .
அப்போது ஆளும் கட்சியினரால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். ஆளும் ஆட்சியாளர்களின் தாளத்திற்கு ஏற்ப செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆளுநர் ரவி சைலேந்திரபாபுவை எச்சரித்துள்ளதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்த தகவலை பாஜக பிரமுகர் கல்யாண ராமனும் பகிர்ந்துள்ளார், இந்த தகவலை பலரும் பகிர்ந்து விரைவில் நடவடிக்கை பாய்வது உறுதி என ஆளும் தரப்பை பார்த்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர், லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தமிழக அரசு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சட்டப்படி சரி என்றால்., திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் சரியான செயலே என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பரவும் தகவல் உண்மையா என்பது வரும் காலங்களில் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் மூலம் தெரியவரும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.