Politics

உதயநிதி வெற்றி பெற்றாலும் எம் எல் ஏ ஆக முடியாதா ?

உதயநிதி வெற்றி பெற்றாலும் எம் எல் ஏ ஆக முடியாதா ?
உதயநிதி வெற்றி பெற்றாலும் எம் எல் ஏ ஆக முடியாதா ?

பிரதமர் மோடி முன்னாள் மத்திய அமைச்சர்கள், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லீ ஆகியோரை கொடுமை படுத்தி கொன்றுவிட்டதாக பகிர் குற்றசாட்டை முன்வைத்தார், இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது, சுஸ்மா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் பிள்ளைகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


மட்டமான அணுகுமுறையை திமுக பின்பற்றுவதாகவும் தேர்தலுக்காக மறைந்த தலைவர்களின் உழைப்பை இழிவு படுத்த வேண்டாம் அவர்கள் பிரதமர் மோடியின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்ததாகவும் அவர்களின் குடும்பம் விளக்கம் அளித்தனர், முன்னாள் மத்திய அமைச்சர்களின் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜின் மரணங்கள் பற்றி

தேர்தல் பரப்புரையில் பேசியது குறித்து இன்று மாலை 5 மணிகுள் விளக்கமளிக்கும்படி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.உதயநிதி ஸ்டாலின் அந்த நோட்டிஸுக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த பதில் கடிதத்தில், “கடந்த மார்ச் 31 தாராபுரத்தில் தான் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன்.

இதனை என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை என ஜகா வாங்கியுள்ளார் உதயநிதி, வழக்கமாக தேர்தல் பரப்புரையில் தலைவர்கள் பேசுவது வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வகையில் இருக்கும்.

ஆனால் திமுக நட்சத்திர பேச்சாளர்களாக கருதப்பட்ட உதயநிதி, ஆ ராசா ஆகியோர்களின் பேச்சு சொந்த கட்சிக்கே சூனியம் வைக்கும் வகையில் அமைந்துள்ளது, ஆ ராசாவின் பேச்சிற்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்தது, இந்நிலையில் உதய நிதியின் பேச்சிற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அது உதயநிதி ஒரு வேலை வெற்றி பெற்றால் அவரது எம் எல் ஏ பதவிக்கு எதிராக அமையுமோ என திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேருந்து மீது கல் எறிந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி பறிக்கப்பட்டு அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியும் காலியானதும் குறிப்பிடத்தக்கது.