தமிழக சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமைதியான முறையில் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது, அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் என ஐந்து முனை போட்டி இந்த தேர்தலில் எதிரொலித்தது.
கடந்த தேர்தலை காட்டிலும் குறைவான வாக்கு சதவிகிதம் பதிவாகி இருப்பது எதிர்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, சென்னையில் மிக மிக குறைவான வாக்கு சதவிகிதம் பதிவாகி இருப்பது குறிப்பாக திமுகவிற்கு மேலும் பின்னடைவை கொடுக்கலாம் என கூறப்படுகிறது, அதிமுக பாஜக கூட்டணி மீதான எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு நேரடியாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த நிலை மாறி களத்தில் எதிரொலிக்கிறது என நேற்றே சில பத்திரிகையாளர்கள் குறிப்பிட்னர்.
நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு செல்ல கூடிய வாக்குகளை பிரிப்பதாகவும் முழுமையாக திமுகவிர்கான வெற்றி வாய்ப்புகளில் தொய்வினை உண்டாக்கலாம் எனவும் தென் மாவட்டங்களில் அமமுக கணிசமான வாக்குகளை பிரிப்பதால் அதிமுக கூட்டணிக்கு சிக்கலை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக சார்பில் தேர்தலுக்கு முந்தைய நாள் அவர்களுக்கு ஆதரவாக MKS என பிரச்சாரம் செய்த பத்திரிகையாளர்கள் உடன் திமுகவின் வியூகம் வகுக்கும் குழு, தகவல்களை கேட்டு பெற்றுள்ளது, தேர்தல் முடிந்துவிட்டது இனி உண்மையான கள நிலவரங்களை தெரிவிக்கலாம் என அந்த நிறுவனத்தின் முக்கிய தலைவர் கூற, ஒரு கட்சி ஆதரவு பத்திரிகையாளர்கள் அழுகாத குறையாக தகவல்களை பரிமாறியுள்ளனர்.
நாம் தான் ஒரு மிதப்பில் இருக்கிறோம் ஆனால் கள நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது, ஆளும் கட்சி மீது எதிர்ப்பு இல்லை, கடந்த லோக்சபா தேர்தலை போன்று பாஜக மீதும் மக்களுக்கு வெறுப்பு இல்லை நாமும் என்னதான் குற்றம் சுமத்தினாலும் அவர்கள் மட்டும் ஒழுங்கா என நம் மீதே குற்றம் சுமத்துகிறார்கள், வெளிப்படையாக கூறவேண்டும் என்றால் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் அரிதி பெரும்பான்மைக்கோ அல்லது தனி கட்சி ஆட்சிக்கோ வாய்ப்பே இல்லை என தலைமுறை சேனலில் பணியாற்றி பின்பு முக்கிய பணக்காரர் ஊடகத்தில் பணியாற்றி குற்றசாட்டு காரணமாக வெளியேறிய பிரபல ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார், இதனால் திமுக தலைமை கடும் அதிர்ச்சியில் இருக்கிறதாம்.