திராவிடம் செய்த போலியான வேலைக்கு ஏன் இந்தியாவை எதிர்க்க வேண்டும் அங்குதான் எங்கள் தமிழர்கள் இருக்கிறார்கள் என தரமான பதிலடி கொடுத்துள்ளார் இலங்கையை சேர்ந்த தமிழர் உமாகரன் ராசையா. இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது :- நண்பர் ஒருவர் ஏன் இந்தியாவை ஆதரிக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டார்.நான் ஏன் எதிர்க்க வேண்டும்?
உலகில் தமிழர்கள் அதிகளவில் வாழும் நாடு இந்தியா.தமிழகத்தில் நாங்கள் காலாகாலமாக தங்கியிருந்தோம்.அது அரசியல் போராட்டமாகிலும் சரி ஆயுதப்போராட்டமாகிலும் சரி.அந்தளவுக்கு தமிழக மக்கள் நம்மை நேசித்தார்கள்.இதனால் நம்மீது கரிசனை காட்டுவதுபோல் நடித்து திராவிடம் வாக்குவங்கியை நிரப்பியதும் மறுக்கமுடியாத உண்மை.
திராவிடச்சூழ்ச்சிக்காக தமிழகத்து மக்களையோ அவர்களின் தேசமான இந்தியாவையோ எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.இந்திய சினிமாவை பார்க்கிறோம் ஏற்கிறோம். அங்கிருந்து துணிகளை வாங்குகிறோம். அவர்களின் ஆடைகலாசாரத்தை ஏற்கிறோம். அங்குள்ள கலைஞர்களை இரசிக்கிறோம். பிறகு ஏன் இந்தியாவை எதிர்க்க வேண்டும்?
ஒருவேளை இந்தியாவின் ஈழத்தமிழர் சார் அரசியல் நகர்வுகளை ஏற்கிறீர்களா? என்று அந்த நண்பர் தெளிவாகக் கேட்டிருந்தால்; நான் இல்லை என்று தெளிவாகச்சொல்லியிருப்பேன் என குறிப்பிட்டுள்ளார், உண்மையில் உமாகரன் ராசையா பதிவு பெரும்பான்மை இலங்கை தமிழர்களின் மனநிலையாகதான் உள்ளது. ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களும் இந்தியாவிற்கு எதிராக இருப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கி இலங்கையில் பவுதர்களும், இந்தியாவில் திராவிடர்களும் மட்டுமே செழிப்பாக வாழ்ந்ததாகவும் பாதிக்கப்பட்டது அப்பாவி இந்திய இலங்கை தமிழர்கள்தான் என்ற கூற்றை இலங்கையை சேர்ந்த உண்மை தமிழர் உலகிற்கு தெரிவித்து இருக்கிறார் என்கின்றனர் இந்தியா இலங்கை தமிழர்களின் ஒற்றுமையை விரும்பும் இந்தியர்கள்.