கடந்த சில மாதங்களாக தமிழகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருந்த லோக்சபா தேர்தல் தற்போது முடிவு பெற்று விட்டது ஏனென்றால் இந்த லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாக்கும் பொழுது ஏழு கட்டமாக நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது அப்பொழுது பெரும் மலப்பாக பார்க்கப்பட்ட இந்த தேர்தல் அறிவிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முன்னதாக தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக 39 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது தேர்தல் காலங்களில் பல பிரச்சாரங்கள் மற்றும் பரபரப்பான விவகாரங்கள் எழுந்தது தமிழகத்தை தாண்டியும் பல அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக வேங்கை வயல் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையிலும் குற்றவாளி இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் விசாரணை என்ற பெயரில் அந்த பிரச்சனை இழுபறியில் இருந்து வருகிறது அதற்குள் லோக்சபா தேர்தலும் வந்துவிட தங்களுக்கு நீதி கிடைக்காமல் பெரும் அவல நிலையை நாங்கள் சந்தித்து உள்ளோம் என தமிழக அரசை கண்டித்து லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர்.
இது மட்டும் இன்றி திமுக தனது சட்டப்பேரவை தேர்தலுக்காக எப்படி சுழன்று சுழன்று ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளுமோ அந்த அளவிற்கு தற்போது லோக்சபா தேர்தலிலும் பிரச்சாரத்தை பரபரப்பாக நடத்தியது அரசியல் வட்டாரத்தின் கவனத்தையும் பெற்றது அதோடு அப்படி திமுக வேட்பாளர்கள் சென்ற பல தொகுதிகளில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாதியிலேயே திரும்பியதும் சில தொகுதிகளுக்குள் மக்கள் அவர்களை கால் வைக்கவிடாமல் எல்லையிலே திருப்பி அனுப்பிய செய்திகளும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே சமயத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பு தமிழக பாஜக சார்பில் நடந்து முடிந்த என் மண் என் மக்கள் நடைபயணம் தமிழக மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தையும் தமிழக பாஜகவின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்தியது அதன் வெளிப்பாடுகள் அனைத்தும் பாஜக மேற்கொண்ட பிரச்சாரங்களில் பார்க்க முடிந்தது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் முடிந்த பிறகு திமுகவின் மூத்த மற்றும் முக்கிய அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுலா மேற்கொண்டு ஓய்விற்கு திரும்பினர் அதிலும் குறிப்பாக முதல்வர் மு க ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கும் சென்று திரும்பினார். ஆனால் தமிழக பாஜக தரப்பு நிர்வாகிகள் நாடு முழுவதும் அடுத்தடுத்த நடந்த லோக்சபா தேர்தலில் தங்கள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினார்கள். அப்படி மற்ற மாநிலங்களின் பிரச்சாரங்களில் பிஸியாக இருந்தாலும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது அறிந்து அதற்கேற்ற கருத்துக்களையும் திமுக அரசிற்கு கொடுக்க வேண்டிய பதிலடியையும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தவறாமல் செய்து வந்தார். மேலும் ஜூன் நான்கிற்கு பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பல ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகள், திட்டங்கள் என அனைத்தும் தமிழக பாஜக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனால் ஏற்கனவே பிரச்சாரத்தின் போது ஆடிப் போயிருந்த திமுக ஜூன் நான்கிற்கு பிறகு என்ன செய்வது என்பது குறித்த ஆலோசனையை மேற்கொள்ள வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி கலந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக மூத்த அமைச்சர்களை அறிவாலயத்தில் சந்தித்த முதல்வர் மு க ஸ்டாலின் ஜூன் ஒன்றில் டெல்லியில் இண்டி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் உள்ளது, அங்கு செல்ல உள்ளேன். ஜூன் மூன்றில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா உள்ளது, அதற்கு அடுத்த நாள் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இப்படி தொடர்ச்சியாக மிக முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகிறது இந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் நாம் வெற்றி பெற்றால் அடுத்து இரண்டு வருடத்திற்கு மொத்த ஆட்சியும் நம் கையில் தான் 2026லும் பலம் பெற்று விடலாம் என்ற வகையில் முதல்வர் கூறியுள்ளதாகவும் அதே சமயத்தில் இந்த மூன்றிலும் தோல்வி கிடைக்கும் என்பது போன்ற சூழ்நிலைகளே தற்போது நிலவுகிறது அப்படி தோல்வி ஏற்பட்டால் 2026ல் தலையில் துண்டை போட வேண்டியதுதான் என்று புலம்பியதாகவும் அறிவாலய வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளது.