இந்திய முப்படை தளபதி (பொறுப்பு ) நரவனே இந்திய இராணுவ தினத்தை முன்னிட்டு பேசிய பேச்சுக்கள் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது குறிப்பாக சீனா பாகிஸ்தான் இரு நாட்டினையும் ஆக்கிரமிப்பாளர் எனவும் வால் ஒட்ட நறுக்க படும் என அவர் தெரிவித்த கருத்துக்கள் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளன. இது குறித்து எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-
இந்திய ராணுவதினம் நேற்று கொண்டாடபட்ட நிலையில் முப்படைகளின் மரியாதையும் இதர சம்பிரதாய கொண்டாட்டங்களும் சிறப்பாக நடந்தன,அதில் இந்தியாவின் முப்படைகளின் பொறுப்பு தளபதி நரவாணே பேசிய பேச்சு உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது. அவர் மிக நுணுக்கமாக சீனா மற்றும் பாகிஸ்தானை குறித்து "ஆக்கிரமிப்பாளர்கள்" எனும் சொல்லை பயன்படுத்தி சாடியிருந்தார், இந்திய பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சக்திகளை விரட்டவும் அவர்கள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதை சொன்னார்.
இதுவரை "சர்ச்சைகுரிய" பகுதி எனும் வார்த்தையில் இருந்து மாறி இந்தியதரப்பில் "ஆக்கிரமிப்பு" எனும் வார்த்தை வந்திருப்பது எல்லையில் இந்தியா ஒரு முடிவோடு நிற்கின்றது என்பதை மட்டும் காட்டுகின்றது. இந்நிலையில் ஜனவரி1ம் தேதியில் இருந்து சீனபடைகளுக்கு முழு சுதந்திரம் என சொன்ன சீனா அதற்கு பின் சத்தமே இல்லை. இதுபற்றி சீன குளோபல் டைம்ஸ் ஆசிரியரிடம் கேட்டால் என்ன சொல்வார் என கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டான்லி ராஜன். தொடர்ந்து இந்தியா சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் தனது வலுவான காலடி தளத்தை பதித்து வருவதுடன் சீனா பரப்பும் போலி செய்திகளுக்கும் தனது பாணியில் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.