Tamilnadu

பிஞ்சு மனதில் நஞ்சு காமெடி என்று பிரதமருக்கு எதிராக விஷம்..! சேனலை தணிக்கை செய்ய வலியுறுத்தல் !

zee tamil Junior Superstar show
zee tamil Junior Superstar show

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தவறான கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்வது போன்ற ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது, தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகள் உட்பட பலர் பங்கு பெரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.


இதனை குழந்தைகள் இளைஞர்கள் நடுத்தர வயதுடையோர் என பலர் பார்வையிட்டு வருகின்றனர் பொழுது போக்கு நிகழ்ச்சியான இதில் அரசியல் சார்ந்த செயல்களும் இடம்பெற்று இருப்பது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டதன் பயன்களை மறைத்து அதனை அப்படியே முட்டாள் தனம் என நகைச்சுவையாக விமர்சனம் செய்துள்ளனர்.

மேலோட்டமாக நகைச்சுவையாக தெரிந்தாலும் இது அரசியல் சார்பற்ற பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது, இது குறித்து வெங்கடேச பிரசன்னா என்பவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதில்.,

பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் செயல் என குறிப்பிட்டுள்ளவர் டிஜிட்டல் இந்தியா மூலம் எவ்வளவு கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல வேண்டியது தானே?? UPI, BHIM பற்றி உலக நாடுகளே இந்தியாவை பாராட்டி வருகிறது.

ஒரு நொடியில் ஒரு APP-இன் மூலம் சுலபமாக பண பரிவர்த்தனை செய்ய முடிகிறது. பேரிடர் காலத்தில் இது எந்த அளவிற்கு உதவியது என்பது அனைவருக்கும் தெரியும்.ஊடங்களை பிடித்த பீடை மெல்ல தற்போது இது போன்ற ரியாலிட்டி ஷோ விலும் தொற்ற ஆரம்பித்துள்ளது.

இது போன்ற குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் ZEE TAMIL channal லை மதிப்பிற்குரிய  Dr.L.Murugan  Tele Communication Ministry.. அவர்கள் Moderation_ செய்ய வேண்டும். எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற நிகழ்ச்சியை மத்திய தொலைக்காட்சி ஒழுங்குமுறை ஆணையம் தணிக்கை செய்யவேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.