Tamilnadu

#BREAKING பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்ட CK சரஸ்வதி ஆடி போயிருக்கும் எதிர்க்கட்சிகள்!!!

Ck saraswathi
Ck saraswathi

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அப்பட்டியலை வெளியிட்டார்.


20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அவர் வெளியிட்டார். பாஜக வேட்பாளர் பட்டியல், தாராபுரம் - எல்.முருகன்கோவை தெற்கு - வானதி சீனிவாசன்,அரவக்குறிச்சி - அண்ணாமலை காரைக்குடி - ஹெச்.ராஜாஆயிரம் விளக்கு - குஷ்பூ, திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் குளச்சல் - ரமேஷ்.


நாகர்கோவில் - காந்தி மொடக்குறிச்சி - சரஸ்வதி திட்டக்குடி - பெரியசாமி திருவையாறு - வெங்கடேசன் விருதுநகர் - பாண்டுரங்கன், ராமநாதபுரம் - குப்புராம்  துறைமுகம் - வினோஜ் செல்வம்   திருவண்ணாமலை - தணிகைவேல்   திருக்கோவிலூர் - கலிவரதன்     மதுரை வடக்கு - சரவணன்

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சரவணன். இவருக்கு வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் இன்று காலை பாஜகவில் இணைந்தார். சென்னையில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் முன்னிலையில் சரவணன் இன்று காலை பாஜகவில் இணைந்தார்.

திமுக-வில் இருந்து விலகி இன்று காலை பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ. சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. மேலும் வேட்பாளர் பட்டியலில் மொடக்குறிச்சி வேட்பாளராக களம் இறக்கப்பட்ட சரஸ்வதி யார் என்று பாஜகவினர் மத்தியில் தேடுதல் எழுந்தது, இந்த நிலையில் ck சரஸ்வதி பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் மொடக்குறிச்சி பகுதியில் பிரபலமான மருத்துவர்.

எளிமையான மருத்துவர், பழகுவதற்கு இனிமையானவர், அத்துடன் மொடக்குறிச்சியில் ஏழை மக்களுக்கு என இவரும் இவரது குடும்பத்தினரும் ஏராளமான மருத்துவ உதவிகளை செய்துள்ளனராம், அதோடு இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதால் முஸ்லீம் வாக்குகள் கூட இவருக்கு கிடைக்கும் என தொகுதியில் பேசப்படுகிறது.

இதனால் மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் யாராக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு பாஜகவின் வேட்பாளர் தேர்வு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  மதுரை வடக்கு,மொடக்குறிச்சி, கோவை தெற்கு, இராமநாதபுரம், தாராபுரம் ஆகிய 5 இடங்களில் பாஜக வெல்லும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.