Tamilnadu

ஒன்றல்ல இரண்டு MLA கள் பாஜகவில் இணைகிறார்கள்!!!

Dmk mla -. Jp nadda
Dmk mla -. Jp nadda

மதுரை திருப்பரங்குன்றம் திமுக சிட்டிங் எம். எல். ஏ சரவணன் இன்று பாஜகவில் இணைய இருக்கிறார் தொடர்ந்து மதுரையில் மருத்துவத்துறையில் சேவை செய்து வருபவர் சரவணன் இவர் கடந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு திமுக சார்பில் வெற்றி பெற்றவர்.


தொடர்ந்து இவரது வளர்ச்சியை திமுக மாவட்ட செயலாளர்களான தளபதி, மூர்த்தி ஆகியோர் மட்டப்படுத்தி வந்ததாகவும், உள் கட்சி பூசல் காரணமாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த தொகுதியை ஒதுக்கியதாக கூறப்படுகிறது, இந்நிலையில் இன்று முறைப்படி அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் பாஜகவில் இணைந்து மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது.

மதுரை சரவணனை தொடர்ந்து காங்கிரஸ் MLA விஜயதாரணியும் அக்கட்சியில் சீட் ஒதுக்கவில்லை என்றால் விரைவில் பாஜகவில் இணைய இருக்கிறாராம் இதுபோல் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் பலர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் இதன் காரணமாகவே பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே திமுக சிட்டிங் எம்.எல்.ஏ, கு.க செல்வம் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது மதுரையில் பிரபலமான திமுக எம்.எல்.ஏ வான சரவணன் பாஜகவில் இணைய இருப்பது இனி தமிழகத்தில் பாஜகதான் மாற்று முகமாக இருப்பதாகவும் அதை அடுத்துதான் பலர் பாஜகவை நோக்கி வருவதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது.

சரவணன் அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும், மருத்துவர் என்பதும் அவருக்கு தொகுதியில் பலமாக உள்ளது மேலும் மணல் கடத்தலை எதிர்த்து வழக்கு தொடுத்ததும் அதை அடுத்தே திமுக மாவட்ட செயலாளர்களின் எதிர்ப்பை பெற்றதாகவும் கூறப்படுகிறது.