அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 17 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது, மீதமுள்ள 3 இடங்களுக்கு வேட்பாளர்கள் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தளி, விளவங்கோடு, ஊட்டி ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகத்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது இந்த சூழலில்தான், நடிகர் அர்ஜுன் தளி தொகுதியில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருப்பதாகவும், தளி தொகுதியில் கன்னட சமூகத்தை சேர்ந்தவர்கள் வாக்குகள் அதிகமாக உள்ளதால் அதை குறிவைத்து அர்ஜுன் களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதனை ஒட்டியே தளி தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது, விரைவில் பாஜகவில் அதிகார பூர்வமாக இணைந்து அர்ஜுன் தளி தொகுதியில் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் கிடைக்கின்றன, சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அர்ஜுன் பாஜக மாநில தலைவர் முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளார் பட்டியலில் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறது பாஜக, குக செல்வம், சரவணன் என சிட்டிங் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தது, திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில் தற்போது அர்ஜுனும் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அது பாஜகவின் வாக்கு வங்கிக்கு உதவும் வகையில் அமையும் என்பதில் மாற்றம் இல்லை.
அதே நேரத்தில் தளி தொகுதியை கே எஸ் நரேந்திரன் கேட்டு வருவதும், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி பாஜக சார்பில் களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் ஊட்டியில் சபிதா போஜன் எனும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்ணை களம் இறங்கலாமா அல்லது வேறு ஒரு முக்கிய பிரமுகரை களம் இறக்கலமாக என தேசிய தலைமை ஆலோசனை செய்து வருகிறதாம்.
பாஜகவில் அர்ஜுன் இணைந்து களம் இறங்கினால் தளி தொகுதியில் பாஜக வெற்றி பெறுவது உறுதி.