Tamilnadu

திமுக பிரமுகர் காவலர்களை மிரட்டிய விவகாரம் டிஜிபி அதிரடி முடிவு !

Dgp
Dgp

விழுப்புரம் திமுக நகர செயலாளர் சக்கரபாணி  காவல்துறையினரை காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை ஒருமையில் பேசியதும், நீ ஒதுங்கு என கூறி மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, மேலும் உனக்கு எதுக்கு துப்பாக்கி ( காவலர்கள் ) என்னிடம் கொடு எனவும் மிரட்டல் விடுத்தார் இந்த காட்சி உண்மையில் சினிமா வில்லங்கள் திரைப்பட போலீஸாரை மிரட்டுவது போல் உண்மையில் நடைபெற்றது.


விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காமராஜார் சாலை. இந்த சாலையில் தலைமை தபால்நிலையம் எதிரே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு  பெரியாரின் சிலை நிறுவப்பட்டது. 

இந்நிலையில், நேற்று இரவு புதுச்சேரி மாநிலம் நெட்டபாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து டயர்களை ஏற்றிக்கொண்டு மராட்டிய  மாநிலம் புனே நோக்கி சென்ற கனரக லாரி வழி மாறி காமராஜர் சாலைக்கு சென்றுள்ளது வழி தவறி வந்ததை உணர்ந்த ஓட்டுனர் லாரியை திருப்ப முயன்றுள்ளார்.

குறுகிய சாலை என்பதாலும் நீண்ட கனரக லாரி என்பதால் லாரியை திருப்பும் போது அங்கிருந்த பெரியார் சிலை மீது மோதியது இதில்  பெரியாரின் முழு உருவ சிலை உடைந்து கீழே விழுந்தது.உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்  லாரியை போலீஸ்நிலையம்  கொண்டுசென்றனர்.

மேலும், லாரி ஓட்டுனர் மச்சேந்திர ஷ்பலி என்பவரை கைது செய்துள்ளனர். பெரியார் சிலை சேதமடைந்ததை அறிந்த தி.மு.க.வினர் சிலையை இடித்தவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விழுப்புரம் நகர போலீஸ்நிலையம் முன்பு அமர்ந்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், நாங்கு முனை சந்திப்பிலும் மறியலில் ஈடுபட்டனர் அப்போது காவல்துயினரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தார் திமுக நகர செயலாளர் சக்கரபாணி, இந்த வீடியோ காட்சிகளை எதிர்க்கட்சிகள் பகிர்ந்து இதுதான் திமுக ஆட்சியில் சட்டத்தை காப்பாற்ற கூடிய காவலர்களின் நிலை வா போ அவன் இவன் என வீட்டு வேலைக்கு இருப்பவரை போன்று காவல் ஆய்வாளரை மிரட்டுகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்தது.

இந்த சூழலில் இந்த தகவல் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரா பாபுவிற்கு தெரிவிக்க அவர் கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது, உடனடியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அழைத்து விவரத்தை கேட்டு அறிந்து இருக்கிறார் அப்போது காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நபர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் இதற்கு முன்னர், விழுப்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டல் விடுத்தது இவர்தான் எனவும் இதையடுத்து இணையத்தில் ஓசி சோரு என ட்ரெண்டிங் ஆனது என பல தகவல்களை திரட்டி தெரிவித்துள்ளார் விழுப்புரம் எஸ்பி.

இதையடுத்து உடனடியாக முதல்வர் தனி செயலாளர் மூலம் இந்த தகவல்கள் மட்டுமின்றி ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் பல ஆளும் கட்சி பிரமுகர்கள் பட்டியல் முதலமைச்சர் பார்வைக்கு அனுப்ப தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி முடிவு செய்துள்ளாராம், விரைவில் போலிசிடம் துப்பாக்கி கேட்டு மிரட்டிய சக்கரபாணி உள்ளிட்ட பலருக்கு சக்கரை காட்ட களம் இறங்க அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் டிஜிபி என்கின்றனர் காவல் துறை உயர்மட்ட தலைவர்கள்.