Tamilnadu

மதவெறிக்கு எல்லையே இல்லையா வீரமணி பகிர் அறிக்கை! தெரியுமா தெரியாதா? வெளுத்து எடுக்கும் தமிழர்கள்!

Veeramani
Veeramani

தமிழகத்தில் மதமாற்றம் எந்த அளவு உயிரை பறிக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் பள்ளி மாணவி தன்னை மதம் மாற சொல்லி வற்புறுத்திகிறார்கள் என வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது பல்வேறு இந்து அமைப்புகள் கிறிஸ்தவ பள்ளியை மூடவேண்டும் என வலியுறுத்தி கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த சூழலில் இதனை பல அரசியல் தலைவர்கள் வேடிக்கை பார்த்துவரும் சூழலில், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி வேண்டும் என பாஜக, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன, இப்படி தமிழகத்தில் மதமாற்றம் ஒரு உயிரை பறித்துள்ள சூழலில் வீரமணி வெளியிட்ட அறிக்கை மேலும் சூட்டை கிளம்பியுள்ளது.

அதாவது யானை போவது கண்ணிற்கு தெரியாது பூனை போவது கண்ணிற்கு தெரியுமா என்ற பழமொழிக்கு இணைங்க சொந்த மாநிலத்தில் இத்தனை கொடுமை நடைபெற்று இருக்கும் சூழலில் அதனை கண்டிக்காத வீரமணி வடமாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

மதவெறிக்கு ஓர் எல்லையே இல்லையா என்ற தலைப்பில் கடிதம் எழுதியுள்ள வீரமணி, உத்தர்கண்ட் மாநிலத்தில், விசுவ இந்து பரிஷத்  நடத்திய தர்மசான்சாத் என்ற கூட்டத்தில், யதி நரசிம்மானந்த் என்றழைக்கப்படும் தீபக் தியாகி,  கடந்த டிசம்பரில் பேசிய, பகிரங்க வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் - குறிப்பாக சிறுபான்மை முஸ்லீம் சமூக மக்களுக்கு எதிராகப் பேசிய பேச்சு, நாகரிக காலத்தில்தான் நாம் வாழுகிறோமோ என்ற அய்யத்தை  ஏற்படுத்தி உலகம் முழுவதிலும் உள்ள கற்றறிந்த, நனி நாகரிகம் உள்ள மக்களையும் முகம் சுளிக்க வைத்த அருவருப்பான பேச்சாகும்.

மதவெறி கலகப் பேச்சுகளைக்  கட்டவிழ்த்து விடுகின்றனர் காவிச் சாமியார்கள் என குறிப்பிட்டுள்ளார், தமிழகத்தில் சமீபத்தில் தேனியில் இந்து அமைப்பை சேர்ந்தவரை இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்யும் நோக்குடன் தாக்கியது கண்டறிந்து கைது செய்துள்ளது தமிழக காவல்துறை அது உங்கள் கண்ணுக்கு தெரியாதா வீரமணி?

நேற்று ஒரு பள்ளி சிறுமி கிறிஸ்தவ பள்ளி கன்னியாஸ்திரி செய்த கொடுமையால் மதமாற்ற கொடுமையால் பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி இறந்து விட்டால் அவள் சாவு உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா வீரமணி? தமிழகத்தில் நடப்பது தெரியவில்லை ஆனால் வட மாநிலத்தில் நடக்கும் சம்பவங்கள் மட்டும் கண்ணிற்கு தெரிகிறதா? என வெளுத்து எடுத்து வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த நெட்டிசன்கள்.