பிரபலம் ஹரி நாடார் பழைய வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார், நடிகை விஜய லட்சுமி சீமான் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் அப்போது வீடியோ ஒன்றில் சீமான் தாய் குறித்து இழிவாக பேசியதாக ஹரி நாடார் விஜய லட்சுமிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
இதில் கொலை மிரட்டல் விடுவதாக விஜய லட்சுமி கொடுத்த புகாரில் ஹரி நாடார் கைது செய்யபட்டுள்ளார், பெங்களூரு சிறையில் பண மோசடி புகாரில் கைது செய்யபட்டு சிறையில் இருந்த ஹரி நாடாரை, கடிதம் அனுப்பி கஷ்டடியில் எடுத்து விசாரணை செய்து கொண்டுள்ளது தமிழக காவல்துறை, ஹரி நாடாரை இத்தனை சட்ட போராட்டம் நடத்தி கைது செய்யவேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுந்தது?
குறிப்பாக சீமானுக்கு செக் வைக்க ஹரி நாடார் வழக்கை தூசி தட்டுவதாக முதலில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது உண்மையான காரணம் என்ன என ஹரி நாடார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்ச்சையாக களம் இறங்கினார் ஹரி நாடார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார் பனங்காட்டு படை கட்சியின் ஹரி நாடார். இங்கு அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோரும் களம் கண்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது, இவர் அணிந்திருந்த நகைகளை காண்பதற்காகவே பெண்கள் கூட்டம் அலை மோதியது.
தனது நாடார் சமுதாயத்தின் நலனுக்காக தேர்தலில் போட்டியிட்டதாக ஹரி நாடார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஆலங்குளத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பை பறிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக-பாஜக கூட்டணியால் ஹரி நாடார் களமிறக்கப்பட்டார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.
அதற்கு ஏற்றவகையில், ஆலங்குளம் தொகுதியில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கோதை ஆலடி அருணா தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பூங்கோதை ஆலடி அருணா 70,614 வாக்குகளை பெற்றிருந்தார். சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் 37,727 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வெறும் 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கோதை தோற்பதற்கு முக்கியக் காரணமாக ஹரி நாடார் விளங்கினார்.
இந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக பூங்கோதை ஆலடி அருணா கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக ஹரி நாடார் கைது செய்யபட்டு இருப்பதாக ஹரி நாடார் தரப்பு குற்றம் சுமத்துகிறது, மேலும் இதனை சட்ட ரீதியாக சந்தித்து விரைவில் வெளிவருவார் ஹரி நாடார் என்கின்றனர் அவர் ஆதரவாளர்கள். பிரபலங்கள் அனைவரின் கைதிற்கு பின்னாலும் ஏதோ ஒரு அரசியல் இருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.