லாவண்யா தற்கொலை வழக்கு கடும் அதிர்வலைகளை நாடு முழுவதும் உண்டாக்கிய சூழலில் விடுதியின் காப்பாளர் சயாகமேரி கைது செய்யப்பட்டார் இந்த சூழலில் லாவண்யா விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக லாவண்யா பெற்றோர் குற்றம் சுமத்தினர் அத்துடன் தமிழக காவல்துறை விசாரணை செய்தால் நேர்மையாக இருக்காது எனவும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மாணவி பதிவு செய்த வீடியோ அடிப்படையில் வழக்கு பதிவு செய்யவும், தொடக்கம் முதலே ஏன் மாணவி தற்கொலை விவகாரத்தில் தஞ்சை எஸ்பி முந்திக்கொண்டு அறிக்கை வெளியிட காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பியத்துடன் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தார்.
இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் லாவண்யா வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது நிலவரம் இப்படி இருக்க மாணவி தற்கொலை விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கிய சூழலில் கொலை குற்றவாளி சகாய மேரிக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த லட்சணத்தில் தமிழகத்தில் லாவண்யா தற்கொலை குறித்து விசாரணை நடந்தால் எப்படி நேர்மையாக இருக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரே சால்வை அணிவித்து வரவேற்கும் கொடுமை இதற்கு முன்னர் தமிழகத்தில் கண்டதுண்டா அப்பாவி மாணவி கண்ணீருடன் தனது சாவிற்கு காரணம் சகாய மேரிதான் என சொல்லிய பின்பும் இப்படி மனசாட்சி இல்லாமல் எப்படித்தான் திமுக நடந்து கொள்கிறது என்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பம் இதுநாள் வரை திமுகவிற்கு வாக்களித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
More Watch Videos