மேற்கு வங்க ஆளுநர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிலையில் தற்போது ட்ரோல் சாங் ஒன்று இணையத்தில் வைரலாகிறது அதில் கமலின் பிரபல கண்மணி பாடலை நெட்டிசன் ட்ரோல் செய்துள்ளனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் முடக்கியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட் செய்த நிலையில், இந்த விவகாரத்தில் ஸ்டாலினின் குற்றசாட்டு உண்மை இல்லை என மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் பதில் அளித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், அரசியலமைப்பு சட்டத்தின், 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்குவங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12 முதல் முடக்கி வைக்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,’ மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கிய செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. எனினும், மு.க, ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், 11ம் தேதி மாலை மேற்கு வங்க சட்டப்பேரவை விவாகரங்கள் அமைச்சரவையில் இருந்து அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 2ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, அரசுகேட்டுகொண்டதையடுத்து சட்டப்பேரவையை முடித்து வைத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சூழலில் என்ன நடந்தது என்றே தெரியாமல் கருத்து பதிவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயலை கிண்டல் செய்து வைரலாகும் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.