Tamilnadu

ஒரே போஸ்ட் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கிய திமுக எம் பி கதிர் ஆனந்த் !

DMK MP kadir anand
DMK MP kadir anand

தமிழக அரசியல் களத்தில் திமுக அதிமுக பாஜக என பல்வேறு விதமாக சுழன்று கொண்டு இருந்தாலும், திமுக அமைச்சர் சேகர்பாபு குடும்பத்தில் நடைபெற்ற காதல் சம்பவத்திற்கு திமுகவை சேர்ந்த எதிர் தரப்பும் அரசியல் செய்யாமல் ஒதுங்கி நிற்கின்றன.இன்னும் சில அமைப்புகளும் இந்த விவகாரத்தில் ஆதரவோ எதிர்ப்போ தெரிவித்தால்


அது நேரடியாக பெரும்பாலான நபர்களை சென்றடையும் என்ற காரணத்தால் மறைமுகமாக பதிவுகளை பதிவிட்டு பாதிக்கப்பட்ட தரப்பிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை எம் பி கதிர் ஆனந்த் அவரது முகநூலில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் .,

ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் பொறுத்து இருங்கள் பெற்றோர் நிச்சயம் திருமணம் செய்து வைப்பார்கள் , அதுவரை பெற்றோருடன் சந்தோசமாக வாழுங்கள், அதுமாதிரியான வாழ்க்கை திரும்ப கிடைக்காது என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பலரும் பகிர வைரலாகியுள்ளது, ஒரு சிலர் எதிர்க்கருத்து கூற 95% மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதில் கதிர் ஆனந்த் காதல் திருமணம் கூடாது என்றோ, தவறோ என்றோ எங்கும் குறிப்பிடவில்லை மாறாக பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும் திருமணங்கள் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார், இதன் மூலம் பெற்றோரின் நிலையில் இருந்து அவர் பேசியதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.