Tamilnadu

கும்மியடித்துவிட்டார்கள் கதறிய திருமுருகன் காந்தி முக்கிய உண்மைகள் வெளியானதால் திமுக அதிர்ச்சி ! கைது நடவடிக்கை பாய்கிறதா?

Thirumurugan gandhi
Thirumurugan gandhi

 தனியார் யூடுப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் திருமுருகன் காந்தி தேர்தலுக்கு முன்னர் என்ன நடந்தது, தேர்தலுக்கு பின்னர் என்ன நடக்கிறது, தங்களை திமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒப்பந்தம் செய்யபட்ட IPAC எவ்வாறு கட்டுப்படுத்தியது என பல்வேறுதகவல்களை பொதுவெளியில் கதறியுள்ளார்.திமுக ,அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும்,


நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனவும் நாளை தேர்வை வைத்து கொண்டு இன்று தீர்மானம் நிறைவேற்றுவது ஏமாற்று வேலை எனவும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ள திருமுருகன் காந்தி, திமுக அரசாங்கம் முதலமைச்சருக்கும், சட்டமன்றத்திற்கும் என்ன அதிகாரம் உள்ளது என மக்களிடம் நேரடியாக சொல்லவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் தலைகீழாக ஆட்சியை மாத்திவிடுவோம் என பேசுவதை நிறுத்துங்கள் உங்களால் செய்ய முடிந்ததா? எனவும் கேள்வி எழுப்பியவர், நடந்த முடிந்த தேர்தல் சித்தாந்த ரீதியாக நடைபெறவில்லை எனவும், முழுக்க முழுக்க IPAC கட்டுப்படுத்திய இந்த தேர்தலால் எந்த பயனும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எங்கள் மீது இப்போதும் வழக்குகள் போட படுகின்றன, ஆட்சி மாறினாலும் ஒன்றும் மாறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதால் குறைகளை சுட்டிக்காட்ட கூடாதா இங்கு என்ன மன்னர் ஆட்சியா நடக்கிறது எனவும் கொந்தளித்துள்ளார். திருமுருகன் காந்தி பெரியாரிய அமைப்புகள் வீரமணி உட்பட 16 பேரின் பட்டியலை IPAC நிறுவனம் தேர்தலுக்கு முன்னர் திமுக தலைமையிடம் கொடுத்து இவர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்தால் திமுக வெற்றி பெறாது என குறிப்பிட்டதாகவும்.

அதன் அடிப்படையில் பட்டியலில் குறிப்பிட்டுள்ள பலரை தேர்தலில் வழக்கம்போல் பிரச்சாரம் செய்யவேண்டாம் என திமுக தலைமை குறிப்பிட்டதாக தேர்தலுக்கு முன்பே செய்திகள் கசிந்தது, ஆனால் தற்போது திருமுருகன் காந்தியின் பேட்டியின் மூலம் வெளியான தகவல் உண்மையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

30 நிமிட பேட்டி என்பதை தாண்டி திமுக மீது திருமுருகன் காந்திக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் வெளிப்பாடான கதறலாகவே இந்த பேட்டி பார்க்கப்படுகிறது. விரைவில் திருமுருகன் காந்தி இன்னும் வெளிப்படையாக பேட்டி கொடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது இது முழுக்க முழுக்க வாக்குறுதிகள் அனைத்தும் பொய் தமிழர்களை ஏமாற்றும் செயல் எனவும் மாணவர்கள் நீட் தேர்வு முதல் அனைத்து தேர்வுகளுக்கும் தயாராக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்பே பேசியது குறிப்பிடத்தக்கது.

திருமுருகன் காந்தி திமுகவின் செயல்பாடுகள் குறித்தும், IPAC குறித்தும் பேசிவருவது  திமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் திமுக கூட்டணி முழுக்க முழுக்க தோல்வியை தழுவலாம் என்பதாலும் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்ற கருத்தினால் பல சமூக வலைத்தள போராளிகள் உண்மையை வெளிப்படையாக பேசிவருவதாக கூறப்படுகிறது.

திமுக தரப்பில் தேர்தலுக்கு முன்னர் திருமுருகன் காந்தியிடம் கொடுத்த வாக்குறுதிகள் குறித்தோ அல்லது IPAC குறித்தோ திருமுருகன் காந்தி தொடர்ந்து பேசினால் அவர் மீது கைது நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகிறது.