Tamilnadu

வீடியோ வெளியிட்டு மறக்க முடியாத பதிலடி கொடுத்த பாஜக நம்ம வீதிக்கே வந்துவிட்டார்களே கப்சுப் ஆனா தியாகராஜன் !

Palanivel thiyagarajan
Palanivel thiyagarajan

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல் முறையாக அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பவர் ,மற்ற அமைச்சர்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்திருப்பவர் என்றாலும் தனது முதிர்ச்சியற்ற செயல்பாடுகளால் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் .


ஜக்கிவாசுதேவ் உடன்  மோதல் போக்கை கடைபிடித்த தியாகராஜன் ஒரு கட்டத்தில் தலைமையில் இருந்து எதிர்ப்பு கிளம்பவே இனி நான் ஜக்கிவாசுதேவ்  குறித்து தற்போது பேசப்போவதில்லை என பின்வாங்கினார்  , அடுத்தது அரசு ஊழியர்கள் அகவிலைப்படி குறித்து தேர்தலுக்கு முன்னர் ஒன்று வெற்றி பெற்ற பின்பு வேறு என பேசி சர்ச்சையில் சிக்கினார் .

இலவச மின்சாரம் குறித்து சர்ச்சையாக பேசி விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு சென்றார் , அதன்  பிறகு சிறிது நாட்கள் சர்ச்சையில் சிக்காமல் இருந்த தியாகராஜன் தற்போது உத்திரப்பிரதேசத்தை கிண்டல்  செய்ய சென்று சர்ச்சையில் சிக்கியது  மட்டுமல்லாமல் சொந்த காசில் சூனியம்  வைத்துள்ளார் .

வடமாநிலத்தை சேர்ந்த காமெடியன் ஒருவர் சிங்கப்பூர் புகைப்படத்தை பகிர்ந்து இந்த இடம் உத்திர பிரதேசத்தில் எங்கு உள்ளது என கிண்டல் செய்தார் இதற்கு பதில் அளித்த தியாகராஜன் நானும் உத்திரபிரதேசத்தில் சிறிது நாட்கள் வேலை செய்துள்ளேன் என கிண்டல் அடித்தார் அதாவது உத்திர பிரதேசத்தின் கட்டமைப்பு சுகாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாக கிண்டல் அடித்தார் .

இந்நிலையில் மற்ற மாநிலங்கள் பற்றி பேசும் தியாகராஜன் தொகுதி எவ்வாறு இருக்கிறது என மதுரை பாஜக வினர் பிரபல சமூக ஊடகம் தினசேவல் மூலம் வீடியோ வெளியிட்டு நாறடித்துள்ளனர் . தியாகராஜனின் சொந்த சட்டமன்ற தொகுதியில் குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்தில் பன்னிகுட்டிகள் உலா வருவதையும்    , உலக புகழ் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே சாக்கடைகள் தேங்கி  குப்பை காடாக காட்சி அளிப்பதையும் , இன்னும் பழனிவேல் தியாகராஜன் சொந்த தொகுதியின் அவல நிலையையும் விடியோவாக பதிவு செய்து பாஜக இளைஞர் அணியை சேர்ந்த மருத்துவர் சங்கரபாண்டி வெளியிட்டுள்ளார் .

இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது , முதலில் உங்கள் சொந்த தொகுதியில் நிலவும் அவலங்களை சரி செய்யுங்கள் , பின்பு மற்ற மாநிலத்தை கிண்டல் செய்யலாம் எனவும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் . ஆகா வீணாக ஒரு ட்விட் பதிவிட்டு இப்போது நமது தொகுதியின் அவலங்கள் நாடு முழுவதும் தெரிய தொடங்கிவிட்டதே என் கப்சுப் ஆகிவிட்டார் தியாகராஜன்.

நாம் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டால் பாஜகவினர் நமது வீதிக்கே வந்து அலசி எடுக்கிறார்கள் என அதிர்ந்து போயி இருக்கிறதாம் தியாகராஜன் தரப்பு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது .