மாரிதாஸ் கைது செய்யப்பட வேண்டும் என்ற தலைப்பில் நீண்ட விளக்க கட்டுரை எழுதியுள்ளார் திமுகவை சேர்ந்த மனுஷ்ய புத்திரன் என்ற ஷேக் முகமது . இதுகுறித்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பின்வருமாறு :-
ஊடகவியலாளர்கள்மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திமுக அரசு ரத்து செய்திருக்கிறது. அதேசமயம் கிஷோர் கே.சாமி என்ற சமூக விரோதி கைது செய்யப்படுகிறார். மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அதிமுக ஆட்சியில் நடந்ததற்கு நேர் எதிரானது. அதிமுக ஆட்சியில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்த பத்திரிகையாளர்கள் மீது வழக்கு, கோவன் போன்ற ஒரு பாடகருக்கு சிறை என்ற நிலை ஒரு புறம் என்றால் கிஷோர் கே சாமி, மாரிதாஸ் போன்றவர்கள் மேற்கொண்ட அவதூறுகள், தனிநபர் தாக்குதல்கள் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களில் எந்த நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை.
உண்மையான ஊடகவியலாளர்கள் பொய் வழக்குகளால் அச்சுறுத்தப்பட்டார்கள். மாறாக ஊடகப் பொறுக்கிகள் பாதுகாக்கப்பட்டார்கள்.அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள்மீது இந்தப் பொறுக்கிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் சாதாரணமானல்ல, ஒயிட் போர்டு மாரிதாஸ் திமுக, இடது சாரி, தலித் தலைவர்கள்மேல் பரப்பிய ஆதாரமற்ற பொய் செய்திகள்,
நியூஸ் 18 லெட்டர் பேடையே போர்ஜரி செய்தது, மத மோதல்களைத்தூண்டியது என எவ்வளவு குற்றங்கள்...தங்களது அடியாட்களாக இவர்கள் செயல்பட்டார்கள் என்ற ஒரே காரணத்தினால் அதிமுக- பா.ஜ.கவால் இவர் காப்பாற்றப்பட்டார். கருப்பர் கூட்டம் விவகாரத்தில் தாடிவைத்த ஒருவரை நியூஸ் 18 ல் பணிபுரிந்த ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த செய்தியாளர் என ஆள்மாறாட்ட அடையாளம் காட்டி அவரது வேலைக்கே உலை வைத்ததுடன் குணசேகரன், செந்தில்வேல் போன்ற முண்ணனி ஊடகவியலாளர்கள் வெளியேறக்கூடிய சூழலையும் இந்த சமூக விரோதக் கும்பல் செய்தது.
மாரிதாஸ்போன்ற கிருமிகள் பரப்பும் பொய்ச்செய்திகள் சமூக வலைத்தளங்கள் வழியாக கடைகோடி மனிதனுக்கும் கொண்டுபோய் சேர்க்கப்படுகின்றன. இந்தப்பொய்களின் வழியாக நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த விஷக்கிருமிகள் சமூகத்தில் பரவாமல் சட்டப்படி தடுத்துவைப்பது மிகவும் முக்கியம். கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டதைவிட பல மடங்கு நியாயம் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும் என்பதில் இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.
மாரிதாஸ் மீது மனுஷ்ய புத்திரன் போன்றோருக்கு இருக்கும் பயத்தின் வெளிப்பாடே உடனடியாக மாரிதாஸை கைது செய்யவேண்டும் என கதறுவது என அரியமுடிக்கிறது, அதே நேரத்தில் மாரிதாஸை கைது செய்தால் அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் உண்டாகலாம் இதனால் மாரிதாஸ் ஆதரவு வட்டம் அதிகரிக்குமே தவிர குறையாது என்பதால் திமுக அரசாங்கம் அடக்கி வாசித்து வருகிறதாம்.
ஆனால் எப்படியாவது மாரிதாஸை ஒரு நாளாவது சிறையில் வைத்து விட வேண்டும் என சில பதிகரிகையாளர்களும், ஒரு சில அரசியல்வாதிகளும் திமுக ஆட்சி அமைந்த மறு நாளில் இருந்தே முயன்று வருகிறார்களாம்.