கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டார்,இதற்கு தடை விதிக்க கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் :-
மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ல் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு எதிராக மாநில அரசு செயல்பட முடியாது. மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்கவேண்டும்.
ஆனால், அதைமீறும் வகையில் தமிழக அரசுகுழு அமைத்துள்ளது ஏற்புடையது அல்ல.உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையிலும், தேசிய நலன் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்களிடம் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு இந்த விவகாரத்தை அரசியலாக்க நினைக்கிறது. எனவே, இக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் நீட் தேர்விற்கு விலக்கு பெற சட்டம் இயற்றப்படும் என ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி அளித்து இருந்தார், ஆனால் வெற்றி பெற்ற பின்பு குழு அமைத்து சாதக பாதகங்களை ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிவித்தது, வெறும் அரசியல் என்றும் மக்களை ஏமாற்ற நடைபெறும் நாடகம் எனவும் விமர்சனம் எழுந்தது இந்த நிலையில்,
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானரர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி , நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழக அரசு குழு அமைத்திருப்பதாக குற்றசாட்டினார்.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம், தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு தரப்பு வழக்கறிஞரை வார்த்தைகளால் துளைத்து எடுத்தனர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எப்படி அரசு எடுக்க முடியும்,
தீர்ப்பிற்கு எதிரான முடிவு எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறியும் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? நீங்களாக தன்னிச்சையா எப்படி குழு அமைக்கலாம் என கேள்வி எழுப்பினர். இதனால் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிர்ச்சி அடைந்தார், இது தொடர்பாக அரசின் விளக்கம் பெற்று தெரிவிக்க எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். திமுக ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் செய்வோம் என வாக்குறுதி அளித்ததோ அவை அனைத்தையும் செய்ய இயலாது என முன்பே அதிமுக பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டினர், உதாரணத்திற்கு நீட் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி படுத்தியுள்ள நிலையில் நீட் தேர்வு ரத்ததாக வாய்ப்பே இல்லை என ஆணி தரமாக மூத்த வழக்கறிஞர்களும் தெரிவித்தனர்
ஆனால் உதயநிதி ஸ்டாலின் போன்றோர் தேர்தலுக்கு முன்னர் வெட்கம், மானம் சூடு சொரணை இருந்தால் நீட் தேர்வை தடை செய்யலாம் அதை நாங்கள் ஆட்சிக்கு வந்து செய்து காட்டுவோம் என குறிப்பிட்டார், இப்போது உதயநிதி கேட்ட அதே கேள்வியை VMSS இருக்கா என அவர்களது கட்சியை நோக்கி எதிர்க்கட்சிகள் கேட்கும் நிலை உண்டாகியுள்ளது.